ஆண்டிராய்டு பயனர்களுக்காகச் செல்லினத்தின் இரண்டாம் பதிகை

8
Filed under Sellinam Android Version

Sellinam Version 2.0 for Android

கடந்த மூன்று மாதங்களாகச் சோதனை ஓட்டத்தில் இருந்த ஆண்டிராய்டு செல்லினத்தின் இரண்டாம் பதிகை (version) இப்போது புதிய சின்னத்துடன் பொதுப் பயனீட்டிற்குத் தயாராக உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

sellinam-promo-1024x500.png

இந்தப் பதிகையில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே காண்போம்:

1. சொற்பிழை தவிர்த்தல் (auto-correction)

மேம்படுத்தப்பட்ட சொற்பட்டியலும் தவறாக எழுதப்பட்ட சொற்களைத் திருத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முரசு அஞ்சல் விசைப்பலகையைப் பயன்படுத்துவோருக்குப் பேருதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, முரசு அஞ்சலில் l (lower case L) விசையைத் தட்டினால் ல் தோன்றும். எனவே ilamai என்று கோத்தால் இலமை என்றுதான் வரும். ஆனால், இந்தப் புதிய பதிகையில் ilamai என்று கோத்து இடைவெளியிட்டால் இலமை என்பதற்குப் பதிலாக இளமை எனும் சொல்லே தேர்ந்தெடுக் கொடுக்கும். இதுபோல பல சொற்பிழை திருத்தும் வசதிகள் இரண்டு தமிழ் விசைப்பலகைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

device-2013-11-03-171806.png device-2013-11-03-171729.png

device-2013-11-03-171853.png device-2013-11-03-193130.png

2. எண்களை உள்ளிடுதல் (long press for numbers)

எண்களை உள்ளிடும்போது [123] எனும் விசையத் தட்டி அதன்பின் தோன்றும் symbols விசைப்பலகையைக் கொண்டு எண்களை உள்ளிடும் நிலை இருந்தது. புதிய செல்லினத்தில் முதல் வரிசையில் உள்ள விசைகளைச் சற்று நீண்ட நேரம் அழுத்தி (long press) எண்களை உள்ளிடலாம். இதுபோலவே முரசு அஞ்சல் விசைப்பலகையிலும் ல/ள, ர/ற, ந/ன/ண எழுத்துகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

device-2013-11-03-171031.png device-2013-11-03-171422.png

3. அதிகரிக்கப்பட்ட பரிந்துரைகள் (extended suggestions list)

சொற்களைக் கோக்கும்போது விசைப்பலகையின் மேல் தோன்றும் பரிந்துரைக்கப்பட்ட சொற்பட்டியலைப் புதிய பதிகையில் விரிவாக்கலாம். பட்டியலின் ஓரத்தில் தோன்றும் [▼] சின்னத்தைத் தொட்டால் பட்டியல் விரிவாக்கப்படும்.

device-2013-11-03-171602.png device-2013-11-03-171518.png

இவைத் தவிர மேலும் பல திருத்தங்களையும் சேர்க்கைகளையும் ஆண்டிராய்டு செல்லினம் 2.0 கொண்டுவருகின்றது. பெற்றுப் பயனெய்துமாறு உங்களை அழைக்கின்றோம்!

பதிவிறக்க முகவரி: https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam

We crossed 50,000 downlaods on Android!

3
Filed under Sellinam Android Version

ஆண்டிராய்டு கருவிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்து மாதங்களுக்கு முன்பு செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பை வெளியிட்டோம். இதன் பதிவிறக்க எண்ணிக்கை 50,000த்தைத் தாண்டியுள்ளது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது!

ஒரு தமிழ் உள்ளீட்டுச் செயலியை எத்தனைபேர்தான் விரும்புவார்கள் என்ற ஐயம் தொடக்கத்தில் இருக்கத்தான் செய்தது. ஆனால் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்த பயனர்களிடமிருந்து வந்த கருத்துகளைப் பார்க்கும்போது, பயன்பாட்டுக்கு எளிமையான செயலியைக் கொடுத்தால் பலரும் தமிழில் எழுதத் தயங்கமாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. தமிழ் உள்ளீட்டை எளிமைப் படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே முரசு அஞ்சல், செல்லினம் முதலிய செயலிகளை உருவாக்கியும் அவற்றைத் தொடர்ந்து மேம்படுத்தியும் வருகின்றோம்.

பயனர்களின் எதிர்பார்ப்பு அவரவர் தொழில்நுட்பத் தேர்ச்சிக்கு ஏற்றவாறு அமைகிறது. சிலர் கையடக்கக் கருவிகளில் உள்ள அதிநவீன ஆங்கில உள்ளீட்டு முறைமைக்கேற்ப தமிழ் உள்ளீடும் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்னும் சிலர் ‘சுவைப்’ (swype) போன்ற வசதி தமிழிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என ஏங்குகிறார்கள்.

இருப்பினும் செல்லினத்தைப் பயன்படுத்திய பெரும்பாலோர் இதுவே தமிழில் உள்ள மிகச் சிறந்த உள்ளீட்டுச் செயலி என்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இவர்களின் கருத்துகள் அனைத்தையும் கூகள் பிளேயில் உள்ள செல்லினத்தின் பக்கத்தில் காணலாம். (https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam)

Sellinam-Play.png

செல்லினத்தின் கூறுகள் சில கையடக்கக் கருவிகளில் இயல்பாகவே சேர்க்கப்பட்டுள்ளதைப் பலரும் அறிவர். எச்.டி.சி. நிறுவனத்தின் ஆண்டிராய்டு கருவிகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எசின் ஏழாம் பதிப்பிலும் “முரசு அஞ்சல்”, “தமிழ் 99” ஆகிய இரண்டு தமிழ் விசைமுக அமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஐ.ஒ.எசில் இயங்கிய செல்லினத்தைக் கொண்டு மற்றச் செயலிகளில் நேரடியாகத் தமிழில் உள்ளிட இயலவில்லையே என்ற குறையை ஐ.ஒ.எசின் ஏழாம் பதிப்பு நீக்கியுள்ளது. ஐ.ஒ.எசின் செல்லினம் இனித் தமிழ் உள்ளீட்டின் மற்றத் தேவைகளை நாடி நிறைவு செய்யும். கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாடு இனி மேலும் கூடும் என எதிர்பார்க்கலாம்.

IMG_2430.PNGScreenshot_2013-10-29-19-16-32.png

ஆண்டிராய்டு செல்லினத்தின் அடுத்தப் பெரும் பதிகை (major version) எந்த நேரத்திலும் வெளிவரலாம். பல புதிய வசதிகளை இந்தப் பதிகையில் சேர்த்துள்ளோம். இவை பயனர்களின் வரவேற்பைப் பெரும் என நம்புகிறோம்!

Sellinam on Android is here …

65
Filed under Sellinam Android Version

நண்பர்களே,

அண்டிராய்டு கருவிகளில் செல்லினம் எப்போது செயல்படும் என்று கேட்டுக்கொண்டிருந்த நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி.  இன்று முதல் உங்கள் கருவிகளில் செல்லினத்தை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்!

2003ஆம் ஆண்டு முதன் முதலில் சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட செல்லினம் 2005ஆம் ஆண்டு பொதுப் பயனீட்டுக்காக ஒரு மாபெரும் நிகழ்ச்சியின் வழி வெளியிடப்பட்டது. ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டக் கருவிகளில் மட்டும் இயங்கி வந்த இந்தச் செயலி, 2009ஆம் ஆண்டு ஐ-போனில் மறுவடிவம் கண்டது. அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு டிசம்பரில் எச்.டி.சி. நிருவனம் தனது ‘எக்ஸ்பிளோரர்‘ கருவியில் செல்லினத்தின் கூறுகளான இணைமதி எழுத்துருவையும் மற்றும் அஞ்சல், தமிழ்-99 விசைப்பலகை அமைப்புகளைக் கொண்ட உள்ளீட்டு முறைகளையும் கருவியிலேயே சேர்த்தது. இன்று அண்டிராய்டு கருவிகளை வைத்திருக்கும் பயனர்கள் தாங்களே தங்கள் கருவிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள கூகல் பிளேஸ்டோரில் செல்லினம் வெளியீடு காண்கிறது.

முழுமையான செயல்பாட்டுக்கு அண்டிராய்டு 4.1ஆம் பதிப்பு (ஜெலி பீன்) தேவைப்படும். இருப்பினும் எச். டி. சி. மற்றும் சம்சுங் போன்ற கருவிகளில் முந்தைய பதிப்புகளிலும் தமிழ் சரிவர இயங்குவதால், செல்லினம் அவற்றிலும் செயல்படும். சரியான பயன்பாட்டை சோதித்துப் பார்ப்பதற்கும் செல்லினத்தில் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் அடங்கியுள்ள முக்கியக் கூறுகள்:

  • சொற்களைக் கோக்கும் போது, அந்தச் சொற்களுக்கு ஏற்றப் பரிந்துரைப் பட்டியலின் (suggestion list) தோற்றம்
  • அஞ்சல் மற்றும் கையடக்கத் தமிழ்-99 விசைப்பலகை அமைப்பைக் கொண்ட உள்ளீட்டு முறை
  • மின்-அஞ்சல், குறுஞ்செய்தி, டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற அனைத்துச் செயலிகளிலும் நேரடியாகத் தமிழில் உள்ளிடும் வாய்ப்பு
  • தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பரிந்துரைப் பட்டியலுடன் உள்ளிடும் வசதி – இதன் வழி கருவியின் முதன்மை உள்ளீட்டு முறையாக செல்லினம் அமையும் வாய்ப்பு

    

ஆண்டிராய்டு கருவிகளை வைத்திருப்பவர்கள் இந்த இலவசச் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் கருத்துகளை இங்கே எழுதிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்!

அனைவருக்கும் எங்களின் இனிய விழாக்கால வாழ்த்துகள்!

அன்புடன்,

– செல்லினம்

 

கையடக்கக் கருவிகளில் தமிழ்

17
Filed under Sellinam iOS version

முத்து நெடுமாறன்


அரசு மற்றும் பெருநிறுவனங்களின் பயன்பாட்டில் மட்டும் இருந்த கணினித் தொழில்நுட்பம், ‘பெர்சனல் கம்பியூட்டர்’ எனப்படும் தனிநபர் கணினிகளின் வழிதான் பொதுமக்களின் பயன்பாடிற்கு வந்தது.

இந்தத் தனிநபர் கணினிகளின் தோற்றமும் பயன்பாடும் தொடக்க காலத்தில் மேற்கு நாடுகளிலேயே இருந்ததால், இவற்றின் ‘ஆட்சி மொழியாக’ ஆங்கிலமே மேலோங்கி இருந்தது. கணினியை இயக்கும் கட்டளைகளும் அவற்றிற்கேற்பக் கணினி வழங்கும் மறுமொழியும் ஆங்கிலத்திலேயே இருந்தது — அதுவும் அமேரிக்க ஆங்கிலத்திலேயே இருந்தது.

தனிநபர் கணினிகள் உலகளாவிய பயன்பாட்டிற்கு வந்த போதுதான் மற்ற மொழிகளிலும் இந்தக் கணினிகள் இயங்கவேண்டிய தேவை ஏற்பட்டது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாகக் கூட இல்லாத நாடுகளின் தாய்மொழிகள் முதலில் சேர்க்கப் பட்டன. ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகள், சீனா, ஜப்பான், கொரியா மற்றும் அரபு மொழிகள் முதலில் சேர்க்கப்பட்டன.

இந்தியாவில் ஆங்கிலப் புழக்கம் அதிகமாக இருந்ததாலும், கணினி வாங்கக் கூடிய வசதி உள்ளவர்கள் ஆங்கிலதில் பேசவும் எழுதவும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததாலும் இந்திய மொழிகளைக் கணினியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எந்தக் கணினி நிறுவனத்திற்கும் ஏற்பட்டதில்லை. சீனா, ஜப்பான் நாடுகளைப்போல இந்திய மொழிகளின் தேவையைக் கட்டாயப் படுத்தும் சட்டம் எந்த நாட்டிலும் இல்லை.

இரண்டாயிரமாம் ஆண்டிற்குப் பிறகே, இந்திய மொழிகள் கணினிகளுக்குள் இயல்பாக ஊடுருவத் தொடங்கின. தமிழும் அவ்வாறே இயல்பாகக் கணினிகளில் இடம்பெறத் தொடங்கியது. அதுவரை, தமிழ் ஆர்வம் உள்ள கணினி வல்லுநர்கள் (கணிஞர்கள்) அவரவர் சிந்தனைக்கேற்பத் தமிழ் மொழியின் பயன்பாட்டைக் கணினிக்குள் சேர்த்தனர். ஒன்றுபடுத்தப்பட்ட தமிழ்த் தொழில்நுட்பத் தரங்கள் (Tamil technology standards) அதன்பின் அறிமுகப்படுத்தப் பட்ட போதும், பழைய முறைகள் பல காரணங்களுக்காக இன்றும் கூட ஒருமைப்படுத்தப்பட்ட தரங்களுக்கு மாறவில்லை.

கையடக்கக் கருவிகள்

தனிநபர் கணினிகளின் பயன்பாடும் வடிவமைப்பும் பலவகையான மாறுதல்களைக் கண்டும் கடந்தும் வந்துள்ளது. ஒரு மேசையின் மேல் இடம் கோரும் தனிநபர் கணினிகளின் அடுத்த பரிணாமம் கையடக்கக் கருவிகளே என்று பலரும் கருதுகின்றனர். கணினி, செல்பேசி, புகைப்படக் கருவி (கமிரா), திசைகாட்டி (காம்பஸ்), நாள்காட்டி, கடிகாரம் போன்ற கருவிகளின் செயல்கள் அனைத்தையும் ஒரே கருவியில் அடக்கும் சாதனைதான் இன்றைய தொழில்நுட்ப உலகை வலிந்து ஈர்க்கிறது.

தமிழ் மொழிக்குக் கணினிகளில் ஏற்பட்ட பின்னடைவு, கையடக்கக் கருவிகளிலும் ஏற்பட்டு விடக் கூடாது எனும் வற்றாதக் குறிக்கோளோடு உலகளாவிய நிறுவனங்களுடன் நடத்திய சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் வரவேற்கத்தக்கப் பயன்களை அளித்துள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கிண்டாஷ் கணினிகளில் மட்டும் அல்லாது, ஐ-போன், ஐ-பேட், ஐ-பாட் டச் மற்றும் ஆப்பிள்-டிவி கருவிகளிலும் முரசு அஞ்சலில் உள்ள தமிழ் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனோடு, எச்.டி.சி. நிறுவனம் இந்தியாவில் வெளியிடும் அவர்களின் (ஆண்டிராய்டு வகை) கையடக்கக் கருவிகளிலும் முரசு அஞ்சலின் எழுத்துருக்களும் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகளுக்கான உள்ளீட்டு முறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தக் கருவிகளில் தவழ்ந்து வரும் தமிழைக் கீழ்க்கணும் படங்களில் காண்போம்:

குறுஞ்செய்தி

செல்பேசிகளில் தமிழ் என்றவுடன் பலருக்கும் முதலில் தோன்றும் பயன் குறுஞ்செய்திதான். குறுஞ்செய்தி முக்கியமான பயன் என்றாலும், முதன்மையான பயன் என்று சொல்ல முடியாது. அனுப்புபவர் மட்டும் அல்லாது, பெறுபவரும் தமிழ் சேர்க்கப்பட்ட செல்பேசியை வைத்திருக்க வேண்டும். எனினும், தமிழில் எழுதப்பட்ட குறுஞ்செய்திகளின் பகிர்வுகளை கீழே உள்ள படங்கள் காட்டுகின்றன. இவை ஐ-போன் கருவியில் இருந்து எடுக்கப்பட்டவை.


201204210020.jpg 201204210019.jpg


இணையப் பக்கங்கள்

விக்கிபீடியாவின் தமிழ்ப் பக்கங்கள் மற்றும் மலேசிய எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு அவர்களின் வலைப்பூ (blog). இதுபோல, அனைத்துலக யூனிகோடு தரத்தில் அமைக்கப்பட்ட அனைத்துத் தமிழ்ப் பக்கங்களையும் தமிழிலேயே படிக்கலாம்.


201204210020.jpg 201204210021.jpg

நட்பூடகங்கள்

ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இருந்து சில தமிழ் வரிகள்.


201204210021.jpg 201204210021.jpg

யூ டியூப்பில் தமிழ்ப் படங்களையும் பாடல்களையும் தமிழிலேயே தேடலாம். ஆங்கிலத்தில் வந்தச் செய்திக்ளைத் தமிழிலும் தமிழில் வந்தச் செய்திகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கலாம்.


201204210021.jpg 201204210021.jpg

செய்திச் செயலிகள்

செம்பருத்தி – மலேசியா இன்று இணைந்து வழங்கும் மலேசியத் தமிழ்ச் செய்திகள் மற்றும் செல்லினத்தில் உள்ள இந்தியச் செய்திகள்.


201204210022.jpg 201204210022.jpg

மின்னூல்

நூல்வடிவம் அச்சில் இருந்து மின்வடிவமாக மாறிவரும் வேளையில் தமிழ் நூல்கள் பின்தங்கிவிடாது என்பதை உணர்த்தும் ஒரு தமிழ் மின்னூல். அதோடு லிப்கோவின் வெளியீடான தமிழ்ப் பேரகராதியின் முழுமையான மின்-வடிவம்.


201204210022.jpg 201204210022.jpg 201204210023.jpg 201204210023.jpg


செல்லினம்

ஐ-போனில் தமிழில் எழுதுவதை எளிமைப் படுத்திய செயலி. தமிழ் உலகிற்கு மலேசியா தந்த கொடை.

201204210024.jpg 201204210024.jpg


கையடக்கக் கருவிகளில் தமிழின் எதிர்காலம்.

தமிழ் மொழியின் புழக்கம் கணினிகளைவிட, கையடக்கக் கருவிகளிலேயே மேலோங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை உண்மையாக்க வேண்டும். பயணிகள் இருந்தால் தான் பயணம் தொடரும். அதனைப்போல தொழில்நுட்ப உலகில் பயனர் இருந்தால் தான் புதியன பிறக்கும்.

தமிழ் மொழியைத் தொழில்நுட்ப உலகில் மேலோங்கி நிற்கச் செய்வதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உண்டு. புதிய மேம்பாடுகளைக் கணிஞர்கள் ஆராயும் அதே வேளையில், இந்த மேம்பாடுகளுக்கு உண்மையான பயன் இருக்கிறது என்பதனைப் பயனர்களே மெய்ப்பிக்க வேண்டும்.

ஆங்கிலத்தை இயல்பாகப் பயன்படுத்தும் வாய்ப்பைப்பெற்ற நம் வளரும் தலைமுறையினருக்கு, தமிழையும் இயல்பாகத் தருவோமே!

(குறிப்பு: 15.4.2012 அன்று மலேசியாவில் உள்ள ஷா ஆலம் நகரில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழா மலரில் வெளிவந்த கட்டுரை)

Version 3.0.1 answers iPad users

20
Filed under Sellinam iOS version

Since the launch of 3.0, we’ve been getting lots of request from users with iPads who are anxious to see Sellinam on their tablets. We’re pleased to announce version 3.0.1 which takes advantage of the iPad’s big screen.

செல்லினத்தின் மூன்றாவது பதிப்பு வெளிவந்தது முதல் ஐ-பேட் வைத்திருக்கும் பயனர் பலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஐ-போனில் இயங்கும் செல்லினம் ஐ-பேடில் இயங்க வாய்ப்பில்லையா என்ற கேள்விக்கு இதோ பதில் வந்துள்ளது: செல்லினம் 3.0.1

Sellinam_iPad_message.png

இதோ செல்லினத்தின் மூன்றாவது பதிப்பு! (Sellinam 3.0)

16
Filed under Sellinam iOS version

Pleased to announce the release of Sellinam 3.0!

This version is a completely rewritten app with more features and better presentation.

  • Compose Tamil messages and share it in Facebook and Twitter in addition to SMS and email.
  • Read India news with much better presentation and in some cases even pictures. India news now includes movie reviews too!
  • Read short-stories from popular authors from Malaysia and Singapore in the newly added mBooks section.

This version stores all fetched content on the phone. This speeds up the fetching of new news and content items as the old ones are not fetched again. New items are marked with a dot, so you will know what you have read and what you have not.

முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பதிப்பில், பல புதிய வசதிகளும் விரைவான செயலாக்கத்திற்கான கூறுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழில் கோர்க்கப்படும் செய்திகளை, குறுஞ்செய்தி மின்னஞ்சல் வழி அனுப்புவது மட்டுமல்லாமல், ஃபேஸ் புக் மற்றும் டிவிட்டர் வழியாகவும் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்தியச் செய்திகள் புதிய பொலிவுடன் படைக்கப்படும் அதே வேளையில் திரை விமர்சனம் எனும் பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிப்பில் மிக முக்கியமான புதுவரவு மலேசிய சிங்கப்பூர் இலக்கியங்களைக் கொண்ட மின்னூல் பகுதி. ரெ. கார்திகேசு, புண்ணியவான், ராஜம் ரஞ்சனி, ஜெயந்தி சங்கர், இந்திரஜித் ஆகியோரின் சிறுகதைகளை ஐ-ஃபோனிலேயெ படித்து மகிழலாம்.

Enjoy Sellinam 3.0. Download for FREE from the App Store: http://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8

IMG_0249.PNG IMG_0253.PNG IMG_0250.PNG IMG_0252.PNG IMG_0254.PNG IMG_0251.PNG

கையடக்கத்தில் கணினித்தமிழ் வழங்கும் தமிழ்ப் பேரகராதி

6
Filed under Sellinam-LIFCO Dictionary, Uncategorized

செல்லினம் ஒரு செயலி மட்டும் அல்ல. கணினித் தமிழ் வளர்க்கும் ஒரு தொழில்நுட்பமும் கூட. இந்தத் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தமிழ்ச் செயலி உங்கள் ஐ-போனை அலங்கரிக்க வந்துள்ளது.LIFCO-Sellinam Tamil Dictionary for iPhone and iPod touch on the iTunes App Store.png

முழுமையான லிப்கோ தமிழ்ப் பேரகராதியில் உள்ள தமிழ்ச் சொற்களை இந்த நவீனக் கருவியில் நீங்கள் தமிழிலேயே தேடலாம். இந்தச் செயலியின் உதவிப்பக்கத்தில் வழங்கப்பட்டுள சில விளக்கங்களை இணைப்பில் உள்ள படம் காண்பிக்கின்றது.

மேலும் இது தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி என்பதால், ஆங்கிலச் சொற்களுக்கு நிகரானத் தமிழ்ச் சொற்களைத் தேடுவது கடினம். என்றாலும், ஆங்கிலச் சொற்களைத் தேடும் போது, அந்தச் சொற்கள் தோன்றும் விளக்கங்களைக் கொண்ட தமிழ்ச் சொற்கள் பட்டியலிலப்படும்.

இந்தச் செயலி இன்று ஆப்பிள் நிறுவனத்தின் ‘செயலிக்கூடத்தில்’ (App Store) பதிப்பிக்கப்பட்டுள்ளது. செல்லினத்தைப் போன்று இது இலவசப் பதிவிறக்கம் அன்று. சிறிய கட்டணம் உண்டு. US$4.99 மட்டுமே!

அரிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து நாங்கள் வழங்கிவருவதற்கு இந்தச் சிறிய தொகை உழைப்பிற்கான ஊதியத்தையும் உற்சாகத்தையும் வழங்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

மேலும் படங்களையும் விவரங்களையும் இந்த முகவரியில் காணலாம்:

http://itunes.apple.com/app/lifco-sellinam-tamil-dictionary/id391740615?mt=8

IMG_0114.PNG
IMG_0120.PNG

Upgrading to iOS4

3
Filed under Uncategorized

செல்லினம் உங்கள் ஐ-போனில் முழுமையாக இயங்க iOS4 தேவை. iPhone3G, iPhone3GS மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை iPod Touch வைத்திருப்பவர்கள் iOS4ஐ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் கணினியில் iTunes செயலி இருந்தால் போதும். ஐ-பேட் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். iOS4 இயங்குதளத்தின் சிறப்புகள் பற்றியும் அதை எவ்வாறு உங்கள் கருவிகளில் பதிவிறக்கம் செய்வது என்பதைப் பற்றியும் இந்தப் பக்கத்தில் காணலாம்: http://www.apple.com/iphone/softwareupdate/

In order for you to take advantage of all the features in Sellinam, you need to update your iPhone software to iOS4.0 or later. Owners of iPhone3G, iPhone3GS and second & third generation iPod Touches can update for free. iPad users may have to wait a while more. For the list of new features in iOS4 and the simple steps to update, see http://www.apple.com/iphone/softwareupdate/

iTunes-இல் தமிழில் பாடல் பெயர்கள்

0
Filed under Uncategorized

உங்கள் ஐ-போன் அல்லது ஐ-பொட் டச் கருவிகளில், பாடல்களின் பெயர்களையும், பாடல் தொகுப்புகளைக் கொண்ட அல்பம்-களின் பெயர்களையும் தமிழில் காணலாம். உங்கள் கணினியில் இருக்கும் ஐ-டியூன்ஸ் செயலியில் பெயர்களைத் தமிழில் கோர்த்து, அவற்ற சிங்க் செய்தால், அப்பெயர்கள் தமிழிலேயே நிலைத்திருக்கும்.

கவணிக்க வேண்டியவை:

- தமிழ் வரிகள் யூனிகோடில் இருக்க வேண்டும். (முரசு அஞ்சல் 10ஐ பயன்படுத்துபவர்களுக்கு இதில் பிரச்சனை இல்லை. காண்க: http://anjal.net)

- கணினியின் இயங்குதலம் XP, Vista, Windows-7 அல்லது Mac OS Xஆக இருக்கலாம். மற்ற தலங்களில் ஐ-டியூன்ஸ் இயங்காது.

- உங்கள் ஐ-போன் அல்லது ஐ-போட் தச்சில் குறைந்தது iOS 4.0 இயங்கவேண்டும்.

201008151505.jpg

201008151510.jpg   201008151510.jpg  

Update available : 2.0.1

15
Filed under Uncategorized

Thanks to everyone who downloaded Sellinam and sent us feedback on the Anjal text input. We fixed some issues and released version 2.0.1. You should see a notification in your AppStore app.

Join us in Facebook: http://facebook.com/sellinam

201008040942.jpg