About

2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது செல்லினம். அதே ஆண்டு ஆகஸ்டு 14ஆம் நாள் மலேசியாவில் மெக்சிஸ் செல்பேசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் செல்லினத்தின் செயல்முறை பலருக்கும் செய்து காட்டப்பட்டது.

2005ஆம் ஆண்டு பொங்கல் நாளன்று, சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8-ன் ஆதரவில் முதன் முறையாக பொதுப் பயனுக்காக இந்தச் செயலி வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து மேடையிலேயே பாடிய இந்தக் கவிதை, உடனே செல்பேசியில் செல்லினத்தின் வழி தமிழில் கோக்கப்பட்டு, வானொலி நிலையத்திற்குக் குறுஞ்செய்தி வழி அனுப்பபட்டது:

sellinam_launch

நேற்றுவரை ​மூன்று தமிழ்

இன்றுமுதல் நான்கு தமிழ்

இதோ கைத்தொலைபேசியில்

கணினித் தமிழ்!

2005ஆம் ஆண்டு “Most Innovative Mobile Application” என்ற பிரிவில், மலேசிய அரசின் ஆதரவில் வழங்கப்படும் “Malaysian ICT Excellence Award” என்ற விருதை வென்றது செல்லினம்.

ICT Award

பல வகையான செல்பேசிகளில் பயனம் செய்த செல்லினம், 2009ஆம் ஆண்டு முதல் ஐ-ஃபோனிலும், 2011ஆம் ஆண்டு முதல் எச் டி சி ஆண்டிராய்டு கருவிகளிலும் 2012ஆம் ஆண்டு முதல் கூகுள் பிளே வழி எல்லா ஆண்டிராய்டு கருவிகளிலும் இயங்கி வருகிறது.

http://www.facebook.com/sellinam

 • Pingback: செல்லினம் » Sellinam on Android is here …()

 • Very good

 • Pingback: கணினியில் செல்லினம் - செல்லினம்()

 • j.mahendran

  i am very fond of sellinam and having very good experience with it. thanks for the developer.

 • Mohamed Hanifa

  Many people say Sellinam Tamil fonts are good.
  I don’t have it.
  Please give me site name where I can get it.
  Thanks.

 • admin

  Dear Mohamed Haifa, you may enter the the following URL in your mobile browser. It will take you to the correct place to download. http://sellinam.com/app

 • Tricia

  I LOVE your app. Will it work with a bluetooth keyboard?

 • admin

  Dear Tricia, yes it will work with bluetooth keyboards. Please see: http://sellinam.com/archives/533

 • Premanandhan

  Microsoft windows Phon availabel Sellinam.

 • admin

  Dear Premanandhan, Sellinam is not available on Windows Phone.

 • Pingback: செல்லினத்தின் பதிவிறக்கம் ஆண்டிராய்டில் 500,000ஐத் தாண்டியது. - செல்லினம்()

 • Satheesh Singam

  Im using samsung J5 prime I cant use sellinam. Kindly help me

 • Could you please describe your problem so we can help you? Also, please send an email – or use the feedback option from Sellinam – so it will be directed to the support people. Our email is sellinam dot help at gmail dot com.

 • Luxaraj Luxan

  திரு.முத்துநெடுமாறன் அவர்களுக்கு என்னுடைய தயவான வேண்டுகோள். செல்லினம் மூலம் பயனடைகின்ற பல்லாயிரக்கணக்கான பயனர்களில் நானும் ஒருவன். இந்த செயலியில் #தங்கிலிஸ் மூலமாக தமிழை தட்டச்சு செய்ய முடியுமாக இருப்பது என்னைப்போன்ற #Bamini முறை மூலமாக தமிழ் தட்டச்சு செய்ய தெரியாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூறுவேன். ஏலவே இதற்காக Google transliterate keyboard வசதி இருந்தாலும், இரண்டையும் பயன்படுத்தியன் என்ற வகையில் எனக்கு செல்லினம் பல வழிகளில் மற்றயதைவிட சிறந்ததாகவே உணர முடிகிறது. இந்த செல்லினம் செயலியை நீங்கள் முற்றாக இலவசமாக வழங்கியமைக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் உங்களுக்கு உரித்தாகட்டும். எனினும் எனக்கு சிறியதொரு வருத்தம் என்னவெனில் என்னால் கணனியில் தமிழ் தட்டச்சு செய்யும் போது இந்த செல்லினம் செயலியை உபயோகிக்க முடியாமல் உள்ளது. தற்போது கணனியில் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் Google இன் செயலியையே நான் பயன்படுத்துகிறேன். எனினும் நான் செல்லினம் மூலம் தட்டச்சு செய்வதால் இன்னும் இலகுவாகவும், சரியாகவும் தட்டச்சு செய்ய முடியும் என நம்புகிறேன். நீங்கள் Android, Apple ரக கையடக்க தொலைபேசிகளுக்கு இந்த செயலியை உருவாக்கியது போல, Windows PC, Mac PC களுக்கும் உருவாக்க வேண்டும் என என்னுடைய தயவான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன்.
  நன்றி.
  த.லக்ஸராஜ்

 • Sakthivel Perumal

  இரண்டாவது சொல்லின் முதல் எழுத்தின் மேல் எல்லா எழுத்தும் ஏறி ஏறி வருகின்றன. அல்லது இரண்டாவது சொல்லைத் தட்டச்சவே முடியவில்லை. இந்தச் சிக்கலை நானும் எதிர்கொள்கின்றேன்….. கூகுளுக்கு எனது சிக்கலைப் புகார் மூலம் தெரிவித்திருக்கின்றேன். இது வரை எந்த பதிலும் இல்லை என்ற தகவலை வறுத்தத்தோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.