தமிழ்-99 வழி எப்படித் தட்டெழுதுவது? – காணொளி விளக்கம்.

செல்லினத்தில் இரண்டு தமிழ் விசைமுகங்கள் வழங்கப் பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். தமிழையே முதன்மொழியாகப் புழங்கும் பயனர்கள் தமிழ்99 விசைமுகத்தையும் அவ்வப்போது தமிழில் எழுதுவோர் அஞ்சல் விசைமுகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழ்-99 விசைமுகம்

1999ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் கண்டதால், தமிழ்99 விசைமுகம், வெளியிடப் பட்ட ஆண்டோடு சேர்ந்த அதன் பெயரைப் பெற்றது.
திறன் கருவிகள் பொதுவானப் பயன்பாட்டில் இல்லாத காலம். கணினிப் பயன்பாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது தமிழ்99. இந்த அமைப்பிற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிறப்பு விசைப் பலகைகளும் அப்போது வெளிவந்தன. இருந்தாலும் இந்தப் பலகைகள் பரவலான விற்பனைக்கு வரவில்லை. தேடிச் சென்று வாங்க வேண்டியச் சூழலே இருந்தது.

தொடுதிரையோடு வெளிவந்த திறன்கருவிகள் தமிழ்99 அமைப்பைக் கொண்டு தமிழில் தட்டெழுதுவதை மிகவும் எளிமையாக்கி உள்ளன. திரையில் தோன்றும் தமிழ்99 விசைமுகம், தமிழ் எழுத்துக்களோடே தோன்றுகின்றது. எனவே எழுத்துகளைத் தேடுவதற்கான தேவை இல்லாமல் போகிறது. தமிழ் விசைகளைக் கொண்டே தமிழில் எழுதுவதை இது மிகவும் எளிமைப் படுத்தியுள்ளது.

முரசு அஞ்சல் செயலியில் உள்ள தமிழ்99 அமைப்பைப் போலவே, செல்லினத்தில் உள்ள அமைப்பும், இந்த விசைமுகத்தின் முழுமையான பயப்பாட்டை பயனர்களுக்கு வழங்குகிறது.
தமிழ்99 விசைமுகத்தின் விளக்கத்தை ஏற்கனவே ஒரு பதிவில் வழங்கி இருந்தோம்.
எவ்வளவுதான் எழுத்து வடிவில் விவரங்களைத் தந்தாலும், ஒருசில மணித்துளிகளில் ஒரு நகர்படம் காட்டும் அளவுக்குத் தெளிவாகத் தர இயலுமா?

செல்லினத்தில் உள்ள தமிழ்99 விசைமுகத்தின் பயன்பாட்டைப் பற்றி ஒரு குறுங்காணொளியாக வெளியிட்டுள்ளார் செல்லினத்தின் ஆர்வலரும் பயனருமான திரு சிவ தினகரன். அதனை இங்கு பகிர்வதில் மகிழ்கிறோம்:

தொடர்புடைய பதிவுகள்:

தமிழ்-99 பயன்பாட்டு வழிமுறைகள்

 • Aishwaryan Tamilwriter

  Panneer என டைப் செய்தால் பன்னீர் என்றே வருகிறதே இது தவறான பிழையா அல்லது திட்டமிட்ட சதியா?

 • எந்தச் செல்லை எந்த விசைமுகம் கொண்டு எழுத விரும்புகிறீர்கள் என்று சொன்னால், உங்களுக்கு உதவ எளிதாக இருக்கும். We can help you better if you let us know that word you want to type and on which Tamil keyboard (Anjal or Tamil99).

 • Aishwaryan Tamilwriter

  ஆண்ட் ராய்டுடுக்கான sellinam app பயன்பபடூத்துகிறேன். அதில் இப்பிரச்சினை.

 • பிரச்சனை என்ன என்று சற்றுத் தெளிவாகச் சொல்லுங்கள் நண்பரே. (1) எந்தச் சொல்லை எழுத விரும்புகிறீர்கள். (2) செல்லினத்தில் 2 விசைமுகங்கள் உள்ளன. நீங்கள் பயன்படுத்துவது எந்த விசைமுகம்: தமிழ்99 விசைமுகமா அல்லது அஞ்சல் விசைமுகமா?

 • Aishwaryan Tamilwriter

  I am using sellinam 4.0.8 . விசை எது என தெரியவில்லை. Space bar அருகே அழுத்தினால் English, phoneticல் எழுத உதவும் தமிழ் & ஆ ஈ ஊ – எனத்தொடங்கும் 3 விசைகள் உள்ளன. Phonetic தமிழ் விசைதான் நான் பயன்படுத்துவது. அதில் p a n n i i r என்று அழுத்தும்போது பன்னீர் என்றே வருகிறது. இதில் ஹை லைட் என்னவென்றால் p a n n i i r அழுத்தியதுமே சரியான சொல் மேலே வர… அதை அழுத்தினாலும் பன்னீர் என்றே வருவதுதான். தினமலர் கருத்துப்பக்கங்களில் பலமுறை பன்னீர் சொல்லைப் பார்த்து யாரோ குறும்பாக எழுதியதாக எண்ணினேன். இன்றுதான் அது செல்லினம் குழப்பம் என தெரிந்தேன்.

 • நீங்கள் பயன்படுத்துவது ‘அஞ்சல்’ விசைமுகம் (Anjal Keypad). p a N N i i r என்று தட்டெழுதி வெளிவிசையை (space bar) அழுத்த வேண்டும். மேல்வரியில் தோன்றும் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மூன்று முறைக்கு மேல் பரிந்துரையில் இல்லாத சொல்லை நீங்கள் எழுதினால், அந்தச் சொல் தானாகவே பட்டியலில் சேந்துவிடும். அல்லது, நீங்களே அதனைப் பட்டியலில் சேர்க்கலாம். காண்க: http://sellinam.com/archives/777

 • Aishwaryan Tamilwriter

  பலனில்லை. எதற்காக N உபயோகப்படுத்த வேண்டும்? P a N N i i r என அழுத்தினால் பண்ணீர் என முச்சுழி (ண) வருவது போல p a n n i i r என எழுத பன்னீர் என்றே வருகிறது.

 • நண்பரே, இது தமிழ்99 தொடர்பான கட்டுரை. கட்டுரை சார்ந்த கருத்துகளை இவ்விடத்தில் பதிவதே பொருத்தம். உங்கள் கேள்வி தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறோம். விரிவான விளக்கங்களுடன். வெளிவரும் :)

 • Anand

  கள் என்பது வரவில்லை. (இருக்கிறார்கள்) இருக்கிறார் என செய்து பிறகு கள் என்று தனியாக செயகிறேன்

 • ச.இளங்குமரன்

  தமிழ் பயன்பாட்டை அதிகப்படுத்தியதில் செல்லினம் முக்கிய பங்காற்றி உள்ளது உண்மையே..

 • இருக்கிறார்கள் என்னும் சொல்லை நீங்களே சேர்த்துக் கொள்ளலாம் நண்பரே. ஒருமுறைச் சேர்தாலே போதும்.

 • மிக்க நன்றி நண்பரே.

 • Pingback: குரல்வழித் தமிழ் உள்ளீடு - கூகுளின் வசதியை செல்லினத்திலும் பெறலாம்! - செல்லினம்()