பன்னீர் – பண்ணீர் – பரிந்துரைப் பட்டியல்

தமிழகத்தில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் சூழலில், அதிக அளவு தமிழ் மின்னுரையாடல்கள் நடந்து வருகின்றன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். அந்த உரையாடல்களில் செல்லினம் பெரிய பங்கை ஆற்றுகின்றது என்பதை, எங்களுக்கு வரும் செய்திகளும், விளக்கங்களைக் கோரி வரும் மின்னஞ்சல்களும் தெளிவாகக் காட்டுகின்றன. தமிழின் பயன்பாடு அதிகரிக்கின்றது என்பது எங்களுக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. இதைத்தவிர செல்லினத்திற்கும், எந்த நாட்டு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்கிறோம்!

சரி, இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்.

“‘பண்ணீர்’ என்னும் பெயரை, அஞ்சல் விசைமுகத்தைக் கொண்டு p a n n i i r என்று எழுதினால், ‘பன்னீர்’ என்றே தோன்றுகிறது, ஏன் பண்ணீர் என்று வரவில்லை?”.

இதுவே எங்களுக்கு வருகின்ற செய்தி. சரியான எழுத்துகளைப் பெறுவதற்கு p a N N i i r என்று எழுத வேண்டும். அதாவது, மேல்நிலை (upper case) N பயன் படுத்த வேண்டும்.

பண்ணீர் - அஞ்சல் விசைமுகம்.

பன்னீர் என்னும் சொல் தமிழில் உண்டு. இந்தச் சொல் செல்லினத்தின் சொற்பட்டியலிலும் உண்டு. பண்ணீர் என்னும் சொல், சொற்பட்டியலில் இல்லாததால், வற்புறுத்தி பண்ணீர் என்று எழுதினாலும், பன்னீர் என்னும் சொல்லையே செல்லினம் பரிந்துரைக்கின்றது.

பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டும் சொல் சரியாக எழுதப்பட்டிருந்தால் வெளி கட்டத்தை (space bar) அழுத்தினால் போதும். அந்தச் சொல்லே செய்தியில் சேரும். பரிந்துரைகள் நிராகரிக்கப்படும். தொடர்ந்து அதே சொல்லை நீங்கள் அவ்வாறே எழுதிவந்தால், அந்தச் சொல் இயல்பாகவே பட்டியலில் சேர்க்கப்படும். அதன்பின், ஓரிரு எழுத்துகளை எழுதினாலே முழுச் சொல்லும் பரிந்துரையிலும் தோன்றும். விரைவாக எழுதவும் உதவும்.

இந்த வசதி உங்களிடம் உள்ள செல்லினத்திலேயே உள்ளது. புதிய பதிகை எதனையும் பதிவிறக்கம் செய்யத் தேவை இல்லை.

விரைவாகத் தட்டெழுத மேலும் சில வசதிகள்

செல்லினத்தின் சொற்பட்டியலில் நாம் அடிக்கடிப் பயன் படுத்தும் சொற்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இருந்தே பரிந்துரைகள் வருகின்றன.  பதிவிறக்க அளவு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, சொற்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியுள்ளோம்.

இருந்தாலும், பட்டியலில் இல்லாதச் சொற்களை, உங்கள் சொந்தச் சொற்பட்டியலில் நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். இதைப்பற்றி விரிவான கட்டுரை ஒன்றை, ‘புதிய சொற்களைச் சேர்க்கும் வழிகள்!‘ என்னும் தலைப்பில், ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

மேலும், நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் சொற்களுக்குக் குறுக்கெழுத்துகளைச் சேர்த்துக் கொள்ளலாம். குறுக்கொழுத்துகள் விரைவாகத் தட்டெழுத்திட பெரிதும் உதவும். இதனை விளக்கும் கட்டுரைகள்: ‘விரைவாகத் தட்டெழுத உதவும் சுருக்கெழுத்து‘, ‘தமிழில் சுருக்கு வழி தட்டச்சு செய்வது எப்படி?’.

இவை எளிதாகவும் விரைவாகவும் தமிழில் தட்டெழுத உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்! மேலும் விளக்கங்கள் வேண்டின், தயங்காமல் கேளுங்கள்.

 • Aishwaryan Tamilwriter

  நிஜமாகவே புரியவில்லையா? இல்லை பிழையை மறைக்கிறீர்களா? யாருமே paNNiir பண்ணீர் கேட்கவில்லை. panniir தான் கேட்கிறார்கள். ப++ர் புஷ்பங்கள் வார்த்தையின் முதல் நான்கு எழுத்து செல்லினத்தில் பிழையாக பன்னீர் என்றே வருகிறது. அதை திருத்தாமல் வெற்று விளக்கம் தராதீர்கள்.

 • பன்னீர் என்னும் சொல் தமிழில் உண்டு. எனவே p a n n i i r என்பது சரியான சொல் தேர்வே. பண்ணீர் என்னும் சொல்லும் உண்டு ஆனால் செல்லினத்தின் சொற்பட்டியலில் இல்லை. எனவேதான் சரியாக பண்ணீர் என்றே எழுதினாலும் பன்னீர் என்றே பரிந்துரைக்கிறது. இதைத்தான் விளக்குகிறோம். பண்ணீர் என்று N கொண்டு எழுதும்போது, பரிந்துரைகளை ஏற்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். இது பிழை அல்ல, குறை! m a n a m என்று எழுதினால் ‘மனம்’ ‘மணம்’ என்னும் இரு சொற்களும் பரிந்துரைக் கட்டத்தில் தோன்றும். ஏனெனில் இரு சொற்களுமே செல்லினத்தின் சொற்பட்டியலில் இருக்கின்றன. விரும்பும் சொல்லை பயனர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வரும். ஒரு, சொல் பட்டியலில் இல்லையென்றால், அது சரியான சொல்லாக இருந்தாலும் செயலிகளுக்கு அது சரியான சொல் என்பது தெரியாது. செல்லினத்திற்கும் அவ்வாறே. இதே விளக்கத்தை மற்றவர்களும் மின்னஞ்சல் வழியாகவும் கேட்டுள்ளனர். எனவேதான் இந்தக் கட்டுரை. உங்களுடைய கருத்துக்கு ஏற்ற விளக்கம் இது இல்லை என்றால் அன்பு கூர்ந்து sellinam dot help at gmail dot com என்னும் முகவரிக்கு சற்று விரிவாக எழுதி உதவுங்கள். தேவையான விளக்கத்தை உங்களிடம் கேட்டுப் பெற்று, உண்மையில் பிழை உள்ளதா என்பதை ஆராய்கிறோம். பிழையாக இருந்தால் உடனே திருத்திவிடுகிறோம். பிழைகளை மறைப்பது எங்கள் எண்ணம் அல்ல. மறைப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அப்படியே யாரும் மறைக்க நினைத்தாலும் இந்தக் காலத்தில், அதுவும் மின்னுட்ப உலகில் அது இயலாது! இன்னும் சொல்லப்போனால், பிழைகளைக் கண்டறிவது நுட்ப நிருவனங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றே – அவை செயலியின் தரத்தை மேலும் உயர்த்த எங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு. இதுபோன்றக் கருத்துகளும் கருத்தாடல்களும் செல்லினத்தின் தரவுயர்வுக்கு பெரிதும் உதவுகின்றன, எனவே மகிழ்வோடு வரவேற்கின்றோம்!

 • Aishwaryan Tamilwriter

  மறுபடி மறுபடி தொடர்பில்லாத விளக்கம். சிரமம் பாராமல் Vikatan news OR the Hindu Tamil க்கு போய் பாருங்கள். எல்லா இடத்திலும் ‘பன்னீர்’ என்றே தோன்றி எரிச்சலூட்டுவது ஏன்?
  எனக்கு வேண்டியது ஒரே ஒரு உதவி. இந்த கட்டுரையில் ஒரு விளக்கப்படம் வெளியிட்டுள்ளீர்களே…இதில் மூன்று பரிந்துரை தெரிகிறது அல்லவா அதில் ( பன்னிரண்டு & பன்னிரு- வார்த்தைக்கு ) நடுவில் உள்ள வார்த்தையை நான் எழுத உதவுங்கள் போதும்.

 • எனக்கு வேண்டியது ஒரே ஒரு உதவி. இந்த கட்டுரையில் ஒரு விளக்கப்படம் வெளியிட்டுள்ளீர்களே…இதில் மூன்று பரிந்துரை தெரிகிறது அல்லவா அதில் ( பன்னிரண்டு & பன்னிரு- வார்த்தைக்கு ) நடுவில் உள்ள வார்த்தையை நான் எழுத உதவுங்கள் போதும்.

  p a n n i i r அவ்வளவுதான். இணைக்கப்பட்டுள்ள திரைக்காட்சியைப் பாருங்கள். இப்படி அடித்தால் உங்களுக்கு என்ன வருகிறது? ஒரு திரைக்காட்சி (screen shot) அனுப்ப இயலுமா? Send us an email and we’ll send you some screenshots to help you.

  https://uploads.disquscdn.com/images/6ecd4627ceee048f3c3cd28aa26b77fb6e93a84b644d254cc5616f1bff50f302.png

  We are not connected to The Hindu or Vikatan. Neither can we assume that the text in their pages were composed with Sellinam. Send us emails w screen shots so we can help you with your specific problem.

  மறுபடி மறுபடி தொடர்பில்லாத விளக்கம்

  நீங்கள் கூறியது “நிஜமாகவே புரியவில்லையா? இல்லை பிழையை மறைக்கிறீர்களா? ”

  இதற்கு விளக்கம் அளிக்க வேண்டாமா? It will be helpful if you don’t make a statement or ask a question for which you don’t need an answer. This is a public forum and thus we are obliged to respond to every comment you make!

  Besides, you certainly have a problem that others don’t seem to have. These are best handled through a support forum – which in our case is an email exchange. That way, the complain gets logged and a proper analysis is conducted to see if it’s indeed a bug in Sellinam. We don’t see your case as a bug, yet.

  We also wish you ‘reply’ to the comments, so people can follow a thread, instead of starting a fresh one all the time. If the posts aren’t going to benefit others, it is best that we take it offline. If the outcome is of any use, we will be happy to summarise it for others, like we always do. Thank you.

 • Aishwaryan Tamilwriter

  வணக்கம். முதலில் நான் மன்னிப்பு கேட்கிறேன். p a n n i i r என டைப் செய்தால் மோசமான தமிழ் வார்த்தை வருகிறது என கொஞ்சம் கோபமாக குற்றம் சாட்டி இருந்தேன். இப்போதும் அப்படித்தான். ஆனால் அது என் போனில் மட்டுமே என கண்டுகொண்டேன். இது ஏதோ வைரஸின் கிருமித்தன வேலை. தினமலர், விகடன் நியூஸ் பக்க செய்திகளிலும் கூட அந்த வார்த்தையாகவே என் போனில் தெரிகிறது. Screen pic இணைத்துள்ளேன். நேற்று என் மகனின் போனில் பார்த்தபோது ஒழுங்கான வார்த்தை கண்டேன். இப்படியெல்லாம் கூட வைரஸ் புகுத்துபவர் உண்டென தெரியாமல் தங்களிடம் கோபம் கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். https://uploads.disquscdn.com/images/ffd906c0d699ff1782a3b1156f5fe5a1993acd7030e44675c3851c9d73eb9f48.png

 • அன்புள்ள நண்பரே: எங்களுக்கு இதைத் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி. நீங்கள் இணைத்துள்ள திரைக்காட்சியைப் பார்த்தோம். இது ஒரு வைரசினால் ஏற்பட்ட கோளாறுபோல் தோன்றவில்லை. உங்கள் கருவியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துருவில் உள்ள வழு (bug, fault, error) போலத் தோன்றுகிறது. கருவியை உற்பத்தி செய்யும் நிருவனத்திடம் இது குறித்து ஒரு புகார் கொடுப்பது நல்லது. இதே வகைக் கருவிகளைப் பயன்படுத்தும் மற்றவர்களின் சிக்கலும் தீரும். அல்லது, கருவியின் வகையையும் (Device Model), அதில் இயங்கும் ஆண்டிராய்டின் பதிப்பையும் சொல்லுங்கள், அவர்களுக்கு நாங்கள் தெரிவிக்க உதவுகிறோம். அன்பு கூர்ந்து விவரங்களை sellinam.help (at) gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் வழி அனுப்புங்கள். மிக்க நன்றி.

 • Pingback: லெனோவா கருவிகளில் உள்ள தமிழ் எழுத்துருவில் ஒரு வழு! - செல்லினம்()