விழாக்கால வாழ்த்துகள்!

விழாக்கால வாழ்த்துகள் | Seasons Greetings

நிறைவுபெறும் 2017ஆம் ஆண்டில் செல்லினம்.காம் இணைய தளத்தின் வழியாகவும், செல்லினம் செயலியின் வழியாகவும் மின்னுட்பம் சார்ந்த சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஒவ்வொரு நாளும் பயனர்களிடம் இருந்து வரும் கருத்துகளும்,  வாழ்த்துரைகளும், செல்லினத்தைத் தொடர்ந்து மேம்படுத்த, எங்களுக்கு உற்சாகமூட்டி வருகின்றன.  எனவே உங்கள் கருத்துகளை, தொடர்ந்து கூறிவாருங்கள்.

திறன் கருவிகளில் தமிழில் எழுத விரும்புவோரின் எண்ணிக்கை உறுதியாகக் கூடிக்கொண்டே வருகிறது. தரவிறக்க எண்ணிக்கையும், அதிகமாகத் தமிழில் வரும் கருத்துகளும், நட்பு ஊடகங்களில் அதிகரித்து வரும் தமிழின் பயன்பாடும் இதற்குச் சான்றாக அமைகின்றன.  ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் நமக்குத் தருகின்றன.

இந்தப் போக்குத் தொடரவேண்டும். தமிழில் மின்பதிவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும். இதற்காக, தமிழில் எழுதுவதை மேலும் எளிமையாக்கும் பணியை செல்லினம் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும்!

தற்போது தேர்வுநிலையில் (பீட்டா) உள்ள ஆண்டிராய்டுக்கான செல்லினத்தின் புதிய பதிகையை, அனைவரின் பயன்பாட்டிற்காக விரைவில் வெளியிட உள்ளோம். நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்வு பதிப்பினைப் பயன் படுத்து வருகின்றனர். இதுவரை எந்தவித புதிய சிக்கலும் தென்படவில்லை. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

கிருஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களைக் கொண்டாடும் உலகளாவிய செல்லினம் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம்!

தொடர்புடைய பதிவு: