தமிழில் சுருக்கு வழி தட்டச்சு செய்வது எப்படி?

சுருக்கு வழி தட்டச்சு நாம் அடிக்கடி எழுதும் சொற்றொடர்களை விரைவாகவும் எளிமையாகவும் உள்ளிட உதவுகிறது. இது குறித்து சில கட்டுரைகளை ஏற்கனவே பதிப்பித்திருக்கிறோம்.

இதன் வழிமுறைகளை தெளிவான விளக்கத்தோடு காணொளி ஒன்றை நமது பயனர் திரு சிவ. தினகரன் உருவாக்கி பதிவேற்றம் செய்துள்ளார்.

சுருக்கு வழி

சில வாரங்களுக்கு முன் இவர் எழுதிய “ஏன் செல்லினத்தை நான் பயன்படுத்துகிறேன்?” என்னும் கட்டுரை பயனுள்ளதாக அமைந்திருந்தது என பல பயனர்கள் மின்னஞ்சல் வழியும் குறுஞ்செய்தி வழியும் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். அவருடைய அந்தக் கட்டுரையைப்போல் இந்தக் கானொளியும் பயனளிக்கும் என்னும் நம்பிக்கையில் இதனை மகிழ்வுடன் வெளியிடுகிறோம்.

ஒவ்வொரு பயனரின் தேவையும் வெவேறாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவற்றை செல்லினம் எவ்வாறு நிறைவு செய்கிறது என்பதை, நண்பர் சிவ. தினகரன் அவர்களைப்போல், நீங்களும் பதிவு செய்யலாம். எங்களுக்கு அனுப்பினால் தகுந்த கட்டுரைகளையும் காணொளிகளையும் செல்லினம் இணையதளத்தில் பதிப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவோம். அவை அதே தேவைகளைக் கொண்டிருக்கும் மற்ற பயனர்களுக்கும் உதவும் அல்லவா?

– செல்லினம்.

தொடர்புடைய கட்டுரை:

1. விரைவாகத் தட்டெழுத உதவும் சுருக்கெழுத்து

 • ரகசிய காதலன்.

  எல்லாம் சரி,செல்லினத்துல எல்லா வசதியும் இருக்குது.தமிழ,தமிழால எப்புடி அடிக்கரது,அதாவது அ,ஆ,இ,இதல்லாம் பாத்தாலே தெரியுது
  அப்புடியே அடிச்சுர்ரம்.க்+ஆ=கா ன்னு சொல்ராங்க,அந்த மாதிரி சில எழுத்த சேத்து அடிச்சாதான் ஒரு சில எழுத்து வருமாம்,அது எல்லாருக்கும்
  தெரியாதே.அதுக்காக வெப்சைட்டுல அந்த ஒரு சில எழுத்தை அடிக்க வழி காட்டும் குரிப்பு வைக்கனுமா,வேனாமா.கரூர் டுடே.காம் போனிங்கன்னா
  அதுல ஒரு கீ போர்டு இருக்கும்,அத ஏன் இவுங்க செல்லினத்துல புகுத்த கூடாது.அது எல்லாருக்குமே நல்லா பழக்கப்பட்ட கீ போர்டு,மிக சுலபமானது.karurtoday.com

 • இந்தக் கட்டுரையைப் பார்தீர்களா நண்பரே? http://sellinam.com/archives/485

 • Pingback: பன்னீர் - பண்ணீர் - பரிந்துரைப் பட்டியல் - செல்லினம்()