About

2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது செல்லினம். அதே ஆண்டு ஆகஸ்டு 14ஆம் நாள் மலேசியாவில் மெக்சிஸ் செல்பேசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் செல்லினத்தின் செயல்முறை பலருக்கும் செய்து காட்டப்பட்டது.

2005ஆம் ஆண்டு பொங்கல் நாளன்று, சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8-ன் ஆதரவில் முதன் முறையாக பொதுப் பயனுக்காக இந்தச் செயலி வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து மேடையிலேயே பாடிய இந்தக் கவிதை, உடனே செல்பேசியில் செல்லினத்தின் வழி தமிழில் கோக்கப்பட்டு, வானொலி நிலையத்திற்குக் குறுஞ்செய்தி வழி அனுப்பபட்டது:

sellinam_launch

நேற்றுவரை ​மூன்று தமிழ்

இன்றுமுதல் நான்கு தமிழ்

இதோ கைத்தொலைபேசியில்

கணினித் தமிழ்!

2005ஆம் ஆண்டு “Most Innovative Mobile Application” என்ற பிரிவில், மலேசிய அரசின் ஆதரவில் வழங்கப்படும் “Malaysian ICT Excellence Award” என்ற விருதை வென்றது செல்லினம்.

ICT Award

பல வகையான செல்பேசிகளில் பயனம் செய்த செல்லினம், 2009ஆம் ஆண்டு முதல் ஐ-ஃபோனிலும், 2011ஆம் ஆண்டு முதல் எச் டி சி ஆண்டிராய்டு கருவிகளிலும் 2012ஆம் ஆண்டு முதல் கூகுள் பிளே வழி எல்லா ஆண்டிராய்டு கருவிகளிலும் இயங்கி வருகிறது.

http://www.facebook.com/sellinam