‘கையடக்கக் கருவிகளில் தமிழ் உள்ளீடும் தீர்வும்’ என்னும் தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற உள்ளது. இதனை தமிழ் இணையக் கல்விக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. செல்லினம் செயலியின் உருவாக்குனர் முத்து நெடுமாறன் நிகழ்ச்சியை வழிநடத்துவார்.
நாள் | 12.9.2016, திங்கட்கிழமை |
நேரம் | மாலை 4.00 முதல் 6.00 மணி வரை |
இடம் | தமிழ் இணையக் கல்விக் கழக கலையரங்கம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அடுத்த வளாகம் |
தமிழில் உள்ளிடுவதற்கு உதவும் உள்ளிடு முறைகள், அவற்றுள் உள்ள வேறுபாடுகள், பரிந்துரைகள் வழங்கும் வசதிகள், தனிப்பட்டத் தேவைகளுக்காகப் பரிந்துரைகளை உருவாக்குதல், சொந்தமான சொற்பட்டியல்களைச் சேர்த்தல், ஆன்றாடத் தேவைகளுக்கு உதவும் மற்றச் செயலிகளில் தமிழில் உள்ளிடுதல் போன்ற தலைப்புகளில் கருத்து பரிமாற்றங்கள் நடைபெறும்.
தமிழ் இணையக் கல்விக் கழக நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டும் அன்பர்கள், மாணவர்கள், செயலிகளை மேம்படுத்தும் கணிஞர்கள், இதழாசிரியர்கள், செய்தியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.