செல்லினத்தில் உணர்ச்சிக் குறிகள் அடங்கிய விசைமுகம் உள்ளதா என்ற கேள்வியோடு அண்மையில் பல மின்னஞ்சல்கள் எங்களுக்கு வந்துள்ளன. தமிழில் குறுஞ்செய்திகளையும் பதிவுகளையும் எழுதும்போது, உணர்ச்சிக் குறிகளைச் சேர்ப்பதற்கு வேறொரு விசைமுகத்திற்கு மாற வேண்டியதில்லை. செல்லினத்திலேயே அதற்கான வசதி உண்டு.
ஆண்டிராய்டு கருவிகளில், புதிதாக செல்லினத்தைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கும் நண்பர்களுக்காக, முந்தைய பதிவின் இடுகையை இங்கே இணைத்துள்ளோம்:
ஐபோன், ஐபேட் கருவிகளைப் பயன்படுத்துவோர் ஐ.ஓ.எசில் இயல்பாக உள்ள குறிகளின் விசைமுகத்தைப் பயன்படுத்தலாம். ஐ.ஓ.எசின் செல்லினத்தில் உள்ள ‘உலகம்’ விசையை, சற்று நேரம் அழுத்திப் பிடித்திருந்தால் விசைமுகப் பட்டியல் தோன்றும். ‘Emoji’ தேர்வைப் பயன்படுத்தி அந்த விசைமுகத்திற்குச் செல்லலாம். ‘இமோஜி’ விசைமுகத்தில் இருந்து மீண்டும் தமிழுக்கு வர அதிலுள்ள ‘க’ விசையைப் பயன்படுத்தலாம்.