மின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு குறித்து இரு வேறு நிகழ்ச்சிகள் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் சிறப்புப் பேச்சாளராக இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
உகலத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) ஏற்பாட்டில் பிப்பிரவரி 26ஆம் நாள் கொழும்பிலும், வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 27ஆம் நாள் யாழ்ப்பாணத்திலும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சியின் விவரங்களைக் கீழே காணலாம்.
யாழ்பாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை, வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனம் (NCIT) ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த விவரங்களையும், பங்கேற்பதற்கான பதிவு விவரங்களையும், இந்த இணைப்பில் காணலாம்.
இரு நிகழ்ச்சிகளிலும் மின்னுட்பக் கருவிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு, குறிப்பாக கையடக்கக் கருவிகளின் வழி தற்போது அதிகரித்து வரும் தமிழ்ப் பதிவுகள், செய்தி பரிமாற்றங்கள் குறித்தும் செயல்முறைக் காட்சிகள் வழி முத்து நெடுமாறன் விளக்கம் அளிப்பார். பயனர்களின் ஐயங்களைக் களைவதற்கான கலந்துரையாடல்களும் நடைபெறும்.