கம்பியில்லா விசைப்பலகையைக் கொண்டு செல்லினம் வழியே திறன்பேசிகளில் தமிழ் உள்ளிடுவது குறித்து திரு சிவ. தினகரன் எழுதியக் கட்டுரை. நீண்ட பனுவல்களை விரைவாகத் தட்டெழுத இந்த வசதி மிகவும் பயன்படும். இதை இங்கே பதிப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
சென்ற வாரம் வந்த அறிவிப்பு. மடிக்கணினி வழியே உலவுபவர்களின் இடையே இடியென விழுந்தது. அது வேறொன்றுமில்லை. வானூர்தியில் செல்பேசி தவிர வேறெந்த மின்னணுக் கருவியும் கையோடு கொண்டு செல்ல தடை என வானூர்தி சேவை நிறுவனங்களின் அறிவிப்பே அது.
செல்பேசி வழியே குறுஞ்செய்திகள் அனுப்பலாகுமே ஒழிய, நெடுந்தொடர்கள் தட்டச்சுவது சற்று சிரமமான செயல்தான். கணினி போன்ற விசைப்பலகை வழியே கதை, கட்டுரை, பத்தி என பெரும் பதிவுகளை உள்ளீடுவது போன்று செல்பேசியில் உள்ளீடு செய்ய இயலுவதில்லை என்பது உண்மைதான்.
பயணம் செய்யும் எல்லா இடங்களுக்கும் மடிக்கணினியோ அல்லது கணினியோ சுமப்பது சாத்தியமில்லை. இது போன்ற தருணங்களில் எனக்கும் இம்மாதிரியான நெருக்கடியான நிலை வாய்த்திருக்கிறது.
அப்போது தனிப்பட்ட விசைப்பகலையக் கொண்டு (External Keyboard) கொண்டு தட்டச்சு செய்ய முயன்றிருக்கிறேன். ஆங்கில வழி தட்டச்சுக்கு சரி. தமிழ் தட்டச்சு? எந்த செயலி உதவுமென தேடித்தேடி அலுத்திருந்த நேரத்தில்தான் ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என் இடுக்கன் கலைத்தது செல்லினம்.
கம்பியில்லா புளூடூத் விசைப்பலகை
கூகுள் இன்டிக் விசைப்பலகை, Swiftkey Keyboard, எழுத்தாணி என பல்வகை தமிழ் விசைப்பலகை இருந்த போதும் தனிப்பட்ட விசைப்பகலையக் கொண்டு தட்டச்சும் போதும் ‘தமிழுக்கு’ என வரும்போது கைவிரித்து என்னை கைவிட்டுவிட்டன.
செல்லினம் ஒரு படி மேலே போய் எவ்வித இணைப்புமின்றி புளூடூத் விதைப்பலகை மூலம் தமிழ் தட்டச்சு வசதியினை சாத்தியப்படுத்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துவிட்டது.
அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற இணைய சந்தைகளில் சகாயமாக புளூடூத் விசைப்பலகை கிடைக்கிறது. உங்களது மொபைல் OTG support செய்யுமா? இல்லையா ? என்ற கவலை கூட இனி வேண்டாம். புளூ டூத் மூலம் இணைப்பு ஏற்படுத்தி இந்த விசைப்பலகை மூலம் லகுவாக தமிழ் தட்டச்சு செய்யலாம்.
கம்பியில்லா வைஃபை (wifi) விசைப்பலகை
இருப்பினும் என்னுடைய Favourite Dell Wireless விசைப்பலகைதான். செல்பேசி சார்ஜ் துளை வழியே Wifi Tongle ஐ சொருகிவிட்டு என்னுடைய டெல் விசைப்பலகை வழியே பத்தி, கட்டுரை, நெடுந்தொடர் என அலுப்பில்லாமல் தட்டச்சு செய்கிறேன். இந்த கட்டுரையை கூட Wifi விசைப்பலகை வழியேதான் தட்டச்சு செய்தேன்.
Wi-Fi என்பது பெயரளவுக்குத்தானே ஒழிய இது Flight Mode லும் அற்புதமாக வேலை செய்யும். உங்கள் செல்பேசியில் நீங்கள் Wi-Fi activate செய்யவேண்டிய அவசியமே இல்லை.
தமிழ் மற்றும் ஆங்கிலம்
Alt +1 – Anjal
Alt + 2 – Tamil99
Alt +3 – English
என எளிதில் விசைபலகையினை மாற்றி விரைவாக தட்டச்சு செய்யலாம். என்னுடைய தனித்தேர்வான தமிழ்99 விசைப்பலகையின் வழியே தமிழ் தட்டச்சு செய்ய யாதொரு தடையுமில்லை. கணினியில் தட்டச்சு செய்யும் அதே வசதியினை செல்லினைம் எனக்கு வழங்கிவிடுகிறது. Google Docs வழியே எந்த பதிவாக இருந்தாலும் தட்டச்சு செய்து மின்னஞ்சல் வழியே அனுப்பிவிடுவேன். தேவையெனில் Printer வழியே அச்சும் எடுத்துக்கொள்வேன். இதனால் எனக்கு பெருஞ்சுமையாக இருந்த மேசைக்கணினி, மடிகணினிகளுக்கு கிட்டத்தட்ட விடை கொடுத்துவிட்டேன்.
சொல்த்தேர்வு
செல்பேசி வழியே தட்டச்சு செய்யும் போது சொல் தேர்வு இருக்கும். எனவே அதன் வழியே நாம் பிழையும் திருத்திக்கொள்வோம். அது இந்த முறை மூலம் தட்டச்சு செய்தால் சாத்தியமா என்றால் அதுவும் சாத்தியமே. Back Arrow தட்டினால் சொல்தேர்வும் திரையில் வந்து விடுகிறது. எனவே தட்டச்சு புல்லட் ரயில் வேகம் எடுக்கிறது.
கணினியில் உள்ள வசதிகள் அப்படியே
ஆம். மிகையில்லை. பனுவல்களை தேர்வு செய்ய மாற்று விசை (Shift Key) மற்றும் Arrow விசை மூலம் தேர்வு செய்தாகட்டும், Control + z கொண்டு Undo செய்வதாட்டும் Copy paste என அனைத்து கணினி பயன்பாடுகளையும் கணினி துணையின்றி இவ்விசைப்பலகை வழியே அனைத்து Shortcut Key method – ஐயும் எளிதில் நம்மால் செய்ய இயலும்.
சாதாரண விசைப்பலகை
வயர் மூலமாக சாதாரண விசைப்பலகை கொண்டு கூட நம்முடைய செல்பேசி இணைத்துக்கொண்டால் தமிழ் தட்டச்சு செய்ய இயலும். நாம் இனி பயணம் செய்யும்போது External Keyboard மட்டும் கொண்டு சென்றால் போதுமானது.
மின்னஞ்சல், வாட்ஸ்ஆப், பெரும் பத்திகள், பதிவுகள் என அலுப்பின்றி தட்டச்சு செய்ய முடியும். கணினி விசைப்பலகை கொண்டு தட்டச்சு செய்யும் போது எளிதாக இருக்கிறது என்பதைவிட ஆசையாக இருக்கிறது என்பதே உண்மை. இனி செல்லினம் கொண்டு தமிழை தட்டுங்கள் நமக்கான கதவு திறக்கப்படும். இனி வானமே எல்லை!
# சிவ. தினகரன், சென்னை 69
7871336611,
மின்னஞ்சல் – aforamma@gmail.com
தொடர்புடையக் கட்டுரை:
புளூதூத் விசைப்பலகைகளுடன் செல்லினம்