ஆண்டிராய்டின் ஜி-மெயில் செயலியில் தமிழில் சரிவர எழுதுவதற்கு ஒரு வழு (bug) தடையாக உள்ளது என ஏற்கனவே எழுதி இருந்தோம். ஜி-மெயில் செயலியில் சிக்கலை ஏற்படுத்தும் அதே வழு, குரோம் உலாவியிலும் இருக்கிறது என்பது குறித்தும் எழுதி இருந்தோம். இந்த வழு தொடர்பான அறிக்கை ஒன்றையும் கூகுள் குரோம் தளத்தில் பதிவும் செய்திருந்தோம்.
அன்மையில் வெளிவந்த இவ்விரு செயலிகளின் மேம்பாட்டுப் பதிகைகளிலும் (updated versions), இந்த வழு நீக்கப்பட்டுள்ளது. புதிய ஜி-மெயிலின் பதிகை எண்ணை கீழே உள்ளப் படத்தில் காணலாம்.
மேம்படுத்தப்பட்ட குரோம் உலாவியின் பதிகை எண்ணையும் இங்கே தருகின்றோம்:
பதிகை எண்களைச் சரிபார்த்தல்
உங்கள் ஆண்டிராய்டு கருவியில் உள்ள இந்தச் செயலிகளின் பதிகை எண்கள் சரியாக உள்ளனவா என்பதை நீங்கள் காண்பதற்கு: ‘Settings’ => ‘Apps’ பக்கத்திற்குச் சென்று, விரும்பும் செயலியைத் தேர்வு செய்தால் பதிகை விவரங்கள் தோன்றும். பதிகை எண்கள் சரியாக இல்லை என்றால், கூகுள் பிளே செயலிக்குச் சென்று “My Apps & Games” பகுதியில் மேம்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.
தொடர்புடையக் கட்டுரைகள்:
1. ஜி-மெயிலின் புதிய பதிப்பில் தமிழில் எழுதச் சிக்கல்.
2. குரோமிலும், இன்பாக்சிலும் அனைத்திலும் அதே வழு!