ஆசுஸ், ஹுவாவே கருவிகளில் தமிழ் உள்ளீடு

இரண்டு ஆண்டுகளுக்கு முன், செல்லினத்தின் 4ஆம் பதிகை வெளியிடப்பட்டது. ஹுவாவே, ஆசுஸ் போன்ற கருவிகளில் இந்தப் பதிகையைப் பயன்படுத்த இயலவில்லை என, இக்கருவிகளைப் பெற்றிருந்த பலர் கூறினர். ஆய்வு செய்து பார்த்ததில், சிக்கல் இந்தக் கருவிகளிலேயே இருந்தது எனத் தெரிய வந்தது. இடைமுகங்கள் தரப்படாத மொழிகளை இந்தக் கருவிகளில் முற்றாகவே மறைக்கப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் தமிழும் அடங்கி இருந்தது.  உடனே இது தொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். இந்தச் சிக்கல் எழும் மற்றக் கருவிகளிலும் இயங்குதளங்களை வற்புறுத்தித் தமிழை இயங்க வைத்தோம்!

ஆசுஸ் கருவிகளின் புதிய ரகங்களில் கூட இந்தச் சிக்கல் உள்ளதைக் காண்கின்றோம்.  வருத்தமடைகிறோம். இந்தச் சிக்கலைப் பற்றி அறியாத பயனர்கள் தொடர்ந்து இந்தக் கருவிகளை வாங்கிவருகின்றனர். தமிழில் செய்திகளை எழுத விரும்புவோர், இதுபோன்றக் கருவிகளைத் தவிர்ப்பதே நல்லது.  அப்படிப்பட்ட ஒன்று உங்களிடம் இருந்தால், அதன் ரகத்தை (மாடலை) கீழே உள்ள கருத்துகள் பகுதியில் குறிப்பிடுங்கள். மற்றவர்கள் அவற்றைத் தவிர்க்க உங்கள் கருத்துகள் உதவும்.

2015ஆம் ஆண்டு மாச்சுத் திங்கள் 23ஆம் நாளன்று வெளியிடப்பட்டக் குறிப்புகள், இன்றும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அண்மையில் உணர்ந்தோம். புதிய பயனர்களின் பயனுக்காக மீண்டும் இங்கே வெளியிடுகிறோம்.


சாம்சங், எச் டி சி, நெக்சாசு போன்ற கருவிகளில் செல்லினத்தின் இயக்கத்தில் எந்தவிதச் சிக்கலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கலுள்ள கருவிகளிலும் செல்லினம் இயங்குவதற்கு செல்லினத்தின் 4.0.1ஆம் பதிகையில் மாற்றுவழிகளைக் கண்டுள்ளோம். இந்தக் கருவிகளில் தமிழ் விசைமுகங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளோம்.

1. செல்லினத்தைப் பதிகை 4.0.8க்கு மேம்படுத்தவும்.

2. மொழித்தேர்வு பக்கத்தில் “Use system language” என்ற தேர்வை அப்படியே வைத்துவிடவும்.  முன்பு போலவே இந்தப் பக்கத்தில் தமிழ் விசைமுகங்களுக்கான தேர்வு தோன்றாது.

3. செய்திகளை எழுதும் போது, செல்லினத்தின் சின்னத்தைத் தட்டி அடுத்தடுத்த விசைமுகங்களுக்குச் செல்லலாம். ‘அஞ்சல்’ விசைமுகமும் ‘தமிழ்99’ விசைமுகமும் ஒன்றன்பின் ஒன்றாக வரும். உங்களுக்குப் பழக்கமுள்ள விசைமுகத்தைக் கொண்டு தமிழில் எழுதலாம்.


We received numerous feedback from users via emails, text and Facebook messages about the absence of Tamil in Sellinam settings when run on Huawei, Asus and a few other models. Our research showed that this may be a bug in the operating systems running on these devices and not in Sellinam. Sellinam works flawlessly on devices like Samsung, HTC and Nexus series. We have added a workaround in version 4.0.1 of Sellinam specifically for problematic ones like Huawei. The steps below will show you how to enable Tamil keypads on these devices.

1. Update Sellinam to version 4.0.8

2. Leave the language selection in the Keyboards section as “Use system language”. You will not see any Tamil keyboards in the list.

3. While composing text with Sellinam, use the Sellinam icon to switch between keyboards. ‘Anjal’ and ‘Tamil99’ keyboards will come one after another. Use the Tamil keyboard you are most familiar with.

device-2015-03-23-012006  device-2015-03-23-012026  device-2015-03-23-005839  Sellinam keyboard toggle

 

விளம்பரம்
http://solvalam.mnewsapps.com
Did you like this? Share it: