தொடர் சொற்களை நினைவில் கொள்ளும் புதிய வசதி

தொடர் சொற்களை நினைவில் கொள்ளும் வசதி செல்லினத்தின் ஆங்கில விசைமுகத்திற்கு இருந்து வருகிறது. தமிழில் எந்தச் சொல்லைத் தட்டினாலும், செல்லினத்தின் சொற்பட்டியலில் இருக்கும் அடுத்தச் சொல்லே பரிந்துரையாக வரும். நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் தொடர்களை ஒவ்வொரு முறையும் முழுமையாக எழுத வேண்டி இருந்தது. இனி அவ்வாறு செய்ய வேண்டியதில்லை.

தொடர் சொற்களை நினைவு கூறும் பரிந்துரைப் பட்டியல்

ஆண்டிராய்டுக்கான செல்லினத்தின் புதிய பதிகை ஒன்று, இன்று கூகுள் பிளேயில் தேர்வுக்காகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பதிகை எண் 4.0.10. இதனைப் கூகுள் பிளேயில் உள்ள தேர்வுப் (பீட்டா) பக்கத்தில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிறிய மேம்பாடே என்றாலும், சில நாட்கள் சோதித்துப் பார்த்து எந்தவிதச் சிக்கலும் இல்லை என்பதை உறுதி செய்தபிறகே பொதுப் பயனீட்டிற்கு இந்தப் பதிகை வெளியிடப்படும்.

சோதித்துப் பார்த்துக் கருத்துகளைக் கூறவிரும்பும் பயனர்கள், sellinam.help@gmail.com என்னும் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்பலாம்.

இந்த வசதியை ஐ.ஓ.எசின் பதிப்பிலும் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஆண்டிராய்டில் பதிவிறக்கம் செய்வதற்கான முகவரி:
https://play.google.com/apps/testing/com.murasu.sellinam

தொடர்புடைய பதிவு:
புத்தம் புதிய மேம்பாடுகளுடன் செல்லினம் 4.0!

Did you like this? Share it: