அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

பொங்கல் விழாவைக் கொண்டாடும் உலகளாவிய செல்லினம் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம்.

இந்த நன்னாளில் செல்லினத்தின் 4.0.10ஆம் பதிகை ஆண்டிராய்டு பயனர்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிய மேம்பாடாக இருந்தாலும், தமிழில் எழுதுவதை இந்தப் பதிகை மேலும் எளிமையாக்கும் என நம்புகிறோம்.

பல புதிய மேம்பாடுகளையும், வசதிகளையும் கொண்ட செல்லினத்தின் பெரிய பதிப்பு இவ்வாண்டு வெளிவரும். அதற்கான வேலைகளை மிகுந்த ஆவலுடன் செய்து வருகிறோம்.

பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் உங்கள் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் கொண்டாடி மகிழுங்கள்!

செல்லினம் குழுவினர்

Image credit: Designed by Freepik