மீள்பார்வை: தமிழ்-99 விசைமுகமும் புள்ளியும்

கேள்வி:  தமிழ்-99 விசைமுகத்தைக் கொண்டு தட்டெழுதும் போது, சில இடங்களில் தானாக புள்ளி விழுகிறது. இதனால் சில சொற்களை எழுத முடியவில்லை.

எ.கா: ‘கிராமம்’, ‘வீட்டுக்காரர்’, ‘சமமாக’, ‘மனனம்’ போன்ற சொற்கள்.

‘கிராமம்’ என்று எழுதும்போது ‘கிராம்ம’ என்று வருகிறது. இதுபோல ‘வீட்டுக்காரர்’ → ‘வீட்டுக்கார்ர’, ‘சமமாக’ → ‘சம்மாக’, ‘மனனம்’ → ‘மன்னம்’ என வருகின்றன.

இதற்குக் காரணம், தமிழ்-99 விசைமுக அமைப்பில் உள்ள ‘தானியக்கப் புள்ளி’ எனும் வசதியே. அகரமேறிய உயிர்மெய் எழுத்துகள் தொடர்ந்து இருமுறை தட்டெழுதப்பட்டால், முதலில் தட்டப்பட்ட எழுத்தின் மேல் புள்ளி விழும்.

எ.கா:
கக → க்க
சச → ச்ச
பப → ப்ப

இவைபோலவே ‘நத’, ‘ணட’, ‘னற’, ‘மப’, ‘ஞச’ போன்ற இணைகள் வந்தாலும் முதல் எழுத்தின் மேல் புள்ளி தானாக விழும். தட்டெழுத்து வேகத்தைக் கூட்டுவதற்காகவே இந்த வசதி தமிழ்-99 விசைமுகத்தில் சேர்க்கப்பட்டது. எடுத்துக்காட்டாக ‘அந்த’ எனும் சொல்லை ‘அ’, ‘ந’, ‘த’ எனும் மூன்று தட்டுகளிலேயே எழுதிவிடலாம். ‘ந’ வுக்குப் புள்ளி தானாகச் சேர்க்கப்ப்பட்டுவிடும்.

தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் இந்த விதிக்குள் அடங்கி இருப்பதால் இந்தத் ‘தானியக்கப் புள்ளி’, தட்டெழுதும் வேகத்தைக் கூட்டுகிறது.

இதே வசதிதான் மேலே கூறப்பட்ட சொற்களை எழுதுவதற்குத் தடையாகவும் இருப்பதுபோல் தோன்றுகிறது. இதற்கு மாற்று வழி உண்டு. புள்ளியைத் தவிர்ப்பதற்கு ‘அ’ விசையைப் பயன் படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கிராமம் என்று இயல்பாக எழுதினால், முதல் ‘ம’-வில் புள்ளி விழும். இதைத் தவிர்ப்பதற்கு ‘க’, ‘இ’, ‘ர’, ‘ஆ’, ‘ம’, ‘அ’, ‘ம’, ‘புள்ளி’ என்று தட்டெழுதினால், முதல் ‘ம’ வில் புள்ளி விழாது. அதன்பின் தட்டப்பட்ட ‘அ’, புள்ளி சேர்வதைத் தடுத்துவிடும். இதுபோலவே மற்றச் சொற்களையும் எழுதலாம்.

எ.கா:
சமமாக → ச ம ம ஆ க
மனனம் → ம ன ன ம புள்ளி

ஓர் அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்குப் பிறகு ‘அ’ தட்டப்பட்டால், அதன் மேல் தானாகப் புள்ளி சேர்வது தவிர்க்கப்படும். இதுதான் விதி!

தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளியின் பயன்பாடு பற்றிய விரிவான விளக்கத்தை இந்தப் பதிவில் காணலாம்: தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி

Did you like this? Share it: