வாட்சாப் நிலைப்பக்கத்தில் விளம்பரங்கள்!

வாட்சாப் நிலைப்பக்கத்தில் (status page) விளம்பரங்கள் வரலாம் என்னும் ஆருடம் கடந்த ஆண்டு வெளிவந்தது. ஆனால் அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. இது அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றச் செய்தியை ஃபேசுபுக் நிறுவனம் அண்மையில் உறுதி செய்துள்ளது.

நெதர்லாந்தில் நடந்த ஃபேசுபுக் சந்தையாக்க மாநாட்டில் படைக்கப்பட்ட ஒரு படைப்பில் இந்த விவரம் இருந்ததை மாநாட்டுப் பேராளர் ஒருவர் டுவிட்டர் வழி பகிர்ந்துள்ளார்.

உலகளவில் செய்தி பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்சாப். இதுவரை முற்றிலும் இல‌வசமாக இருக்கும் இதன் பயன்பாடு வருவாய் நோக்கி விளம்பரங்களுக்கு இடம் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. நிலை பக்கங்களில் விளம்பரம் செய்பவர்களிடம் வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது. 

ஃபேசுபுக், யூடியூப்பு, டுவிட்டர் போன்றவற்றிலும் காணொளிகளுக்கும் பதிவுகளுக்கும் இடையே விளம்பரங்கள் வருவது போல், வாட்சாப் நிலைப்பக்கங்களிலும் அடுத்த ஆண்டு முதல் விளம்பரங்கள் தோன்ற உள்ளன. 

இருந்தாலும், மற்ற விளம்பரச் சேர்க்கைகளைக் காட்டிலும், வாட்சாப்பின் நிலைப்பக்க விளம்பரங்கள் இயல்பான பயன்பாட்டிற்கு இடையூறு விளைவிக்காத வகையில் சேர்க்கப்படுகிறது என்று பரவலாகக் கருதப்படுகிறது.

குறைந்த கட்டணமாக இருந்தாலும், கட்டணங்களைவிட கட்டணமில்லா சேவைக்கே அதிக வரவேற்பு இருப்பதை செயலிகளை உருவாக்கும் நிறுவனங்கள் நன்கு அறிந்துள்ளன. எனவே, இடையூரில்லா இந்த நிலைப்பக்க விளம்பரங்கள், வாட்சாப்பின் பயன்பாட்டை பெறுமளவு பாதிக்காதென்றே நம்புகின்றனர்.

வாட்சாப் நிலை பக்கத்தில் விளம்பரங்கள்
வாட்சாப் நிலைப்பக்கத்தில் விளம்பரங்கள்.

நன்றி : செல்லியல்

இணைப்புகள்:

  1. 2020 முதல் வாட்சாப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்!
  2. WhatsApp users will start seeing in-app ads within ‘Status’ feature from 2020

தொடர்புடையவை:

  1. வாட்சாப்: அனுமதி இல்லாமல் இனி குழுவில் இணைக்க முடியாது!
Did you like this? Share it: