தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்

கடந்த 14-08-2019ஆம் நாள், சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் ‘தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்’ என்ற தலைப்பில், செல்லினத்தை உருவாக்கிய முத்து நெடுமாறன் ஒரு சொற்பொழிவை ஆற்றினார்.

கலந்து கொண்டோரிடையே நல்ல வரவேற்பைப்பெற்ற இந்தப் பொழிவின் காணொளிப் பதிவை பலரும் விரும்பிக் கேட்டிருந்தனர்.

நிகழ்ச்சி முழுவதையும் பதிவு செய்த நூலகத்தார் அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதோ அதன் இணைப்பு: