பொங்கலுக்கும் செல்லினத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 2005ஆம் ஆண்டு பொதுப்பயனீட்டிற்குச் செல்லினம் முதன்முதலாக வெளியிடப்பட்டது பொங்கல் நாளன்றே! அதனைத் தொடர்ந்து புதுப்புதுப் பதிகைகளும், புதிய கருவிகளுக்கான உருவாக்கங்களும் பெரும்பாலும் பொங்கல் நாளன்றே வெளியிடப் பட்டன.
அந்த வரிசையில், வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள பொங்கல் நன்னாளில், ஒரு புதிய தனிச்சிறப்புடன் செல்லினத்தின் பொங்கல் வெளியீடு வெளிவர இருக்கிறது.
இந்த வெளியீடு குறித்துப் புதிரான விளம்பரச் செய்திகள் செல்லினத்தின் முகநூல் பக்கத்தில் கடந்த சில நாள்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
செல்லினத்தின் யூடியூப் வரிசையிலும் (சேனல்), முகநூல் பக்கத்திலும் இந்த வெளியீட்டு நிகழ்ச்சி நேரலையாக நடைபெறும். நிகழ்ச்சிக்கான இணைப்பும் இவ்விரண்டு பக்கங்களிலும் சேர்க்கப்பட்டுவிட்டன. இணைப்புகளைக் கீழே காணலாம்.
என்ன புதுமைகள் சேர்க்கப்படவுள்ளன என்று பல பயனர்கள் ஆவலோடு கேள்வி எழுப்பி வருகின்றனர். முகநூலில் சேர்க்கப்பட்ட படங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகள் எதிலுமே செல்லினத்தில் சேர்க்கப்படவுள்ள சிறப்புகளைப் பற்றி நேரடியாகக் கூறப்படவில்லை.
தனிச்சிறப்புகள் எவை என்பது இன்னும் இரண்டு நாள்களில் தெரியும். முகநூல் பதிவுகளில் சிலர் கூறுவதுபோல் ‘காத்திருப்போம்’.
நிகழ்ச்சிக்கான யூடியூப் இணைப்பு இதோ:
தொடர்புடையவை:
- புதிய ஐபோன்களுக்கான செல்லினம் 5.0 வெளியிடப்பட்டது
- செல்லினம் 5.0.3ஆம் பதிகை – ஒரே ஒரு சிறிய சேர்க்கையுடன்
இணைப்புகள்: