இனிய பொங்கல் வாழ்த்துகள்!

கொண்டாடும் உலகளாவிய செல்லினம் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம். உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், அன்புக்குரிய அனைவரின் நெஞ்சத்திலும் மகிழ்ச்சி கொஞ்சட்டும். பாதுகாப்போடும் களிப்புடனும் இந்தத் திருநாளைக் கொண்டாடுவோம்!

இந்த நன்னாளில் (மாலை 5.00 மணி இந்திய/இலங்கை நேரம், மாலை 7.30 மணி மலேசிய/சிங்கப்பூர் நேரம்), ஒரு புதிய தனிச்சிறப்புடன் செல்லினத்தின் புதிய பதிகை வெளியீடு காண்கின்றது. இது குறித்து ஏற்கனவே செய்தியை வெளியிட்டிருந்தோம். யூடியூப் வழியாகவும் முகநூல் வழியாகவும் நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

செல்லினம் குழுவினர்

Did you like this? Share it: