இனிய பொங்கல் வாழ்த்துகள்!

கொண்டாடும் உலகளாவிய செல்லினம் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம். உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், அன்புக்குரிய அனைவரின் நெஞ்சத்திலும் மகிழ்ச்சி கொஞ்சட்டும். பாதுகாப்போடும் களிப்புடனும் இந்தத் திருநாளைக் கொண்டாடுவோம்!

பொங்கலை ஒட்டி நாளை, 15 சனவரி 2022, (மாலை 5.00 மணி இந்திய/இலங்கை நேரம், மாலை 7.30 மணி மலேசிய/சிங்கப்பூர் நேரம்), எங்கள் கனியும் மணியும் எனும் குழந்தைகளுக்கான ஊடாடும் உயிரோவியக் கதைகளையும் விளையாட்டுகளையும் கொண்ட ஒரு செயலியை அனைத்துலகப் பயன்பாட்டுக்காக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்து ஏற்கனவே செய்தியை வெளியிட்டிருந்தோம். யூடியூப் வழியாகவும் முகநூல் வழியாகவும் நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

செல்லினம் குழுவினர்

Did you like this? Share it: