அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை!

அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை

மின்னிலக்க உலகிலேயே பிறந்து வளரும் இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கணினியிலும் திறன்பேசிகளிலும் தமிழை வாசிப்பதும், எழுதுவதும், செய்திகளை அனுப்புவதும் விந்தையான ஒன்றாக இருக்காது. “ஆங்கிலத்தைப்போலத் தமிழும் இருக்கிறது” என்று அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கணினிக்குள் தமிழ் எழுத்துகள் தானாகப் புகுந்துவிடவில்லை.

சுமார் நாற்பதாண்டுகளுக்குமுன், சாதாரனப் பயன்பாட்டுக்குக் கணினிகள் வந்தபோது, அவற்றில் தமிழ் இல்லை. அதற்கு அப்போதே விதைபோட்டவர், இன்றும் தொடர்ந்து அழகிய செடிகளாகத் தமிழெழுத்துகளின் தோற்றத்தை வடிவமைத்து வளர்த்துக்கொண்டிருப்பவர் மலேசியாவின் முத்து நெடுமாறன்.

தொடக்கப்பள்ளிக் காலத்திலிருந்தே எழுத்துருக்களின் மீதும் அவற்றின் அமைப்புகளின் மீதும் தணியாத ஆர்வம் கொண்டார். அப்போது கணினி வந்திருக்கவில்லை. பின்னாளில் கணினிப் பொறியியலாளராக ஆனபோது தமிழ் எழுத்துகளைக் கணினிக்குள் கொண்டுவந்தார்.

கணினிகளிலும் திறன்பேசிகளிலும் நீங்கள் தமிழில் இலகுவாக வாசிப்பதற்குப் பின்னால் முத்து நெடுமாறனின் தீராத ஆர்வமும், தனிப்பட்டப் பெருமுயற்சியும், அயராத நெடுங்கால உழைப்பும் மறைந்திருக்கிறது.

எழுத்து வடிவங்களைக் குறித்த தன் இளமைக்கால ஆர்வம், தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தக்க தமிழை ஈடுகொடுக்கவைக்க எதிர்கொண்ட சவால்கள், கட்டம் கட்டமாக அடைந்த வளர்ச்சிகள், முரசு அஞ்சல், செல்லினம் போன்ற அவரது செயலிகள் தோன்றிய வரலாறு, இன்றைய நிலை, எதிர்காலத் திட்டங்கள் என்று ஒரு வரலாற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார் முத்து நெடுமாறன்.

அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை

‘அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை’ எனும் தலைப்பிலான் இப்பதிவை, சிங்கப்பூரில் வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்‘ மாத இதழினர், கடந்த சூன் மாதப் பதிப்பில் முகப்புக் கட்டுரையாகவும், இம்மாதப் பதிப்பில் அதன் இறுதிப் பகுதியையும் வெளியிட்டுள்ளனர்.

அச்சிலும், இணையத்தில் பி.டி.எப் வடிவிலும் வெளிவரும் இந்த இதழ்களை, சந்தாதாரர்கள் ‘தி சிராங்கூன் டைம்ஸ்‘ இணையப் பக்கத்தில் வாசிக்கலாம். குறைந்த சந்தா விலையையே கொண்டுள்ள இந்த இதழ், மலேசிய செய்திகளையும் தாங்கி வருகிறது.

  • செல்லினம்.காம் ஆசிரியர் குழு

இணைப்புகள்:

  1. தி சிராங்கூன் டைம்ஸ்
  2. செல்லினம் முகநூல் பக்கம்

தொடர்புடையவை:

  1. தனிச்சிறப்புடன் செல்லினத்தின் பொங்கல் வெளியீடு
  2. முரசு அஞ்சல் : ஒரு பயனரின் பயணம்
Did you like this? Share it: