சியாவுமி, ரெட்மி, போக்கோ கருவிகளில் செல்லினம் சரிவர இயங்குவதற்கு அந்தக் கருவிகளில் உள்ள ஆண்டிராய்டில் சிக்கல் என்று சியாவுமொயே உறுதிப்படுத்தியது என்று கடந்த ஆண்டு கூறியிருந்தோம். செல்லினம் பயனர்களுக்காக இந்த சிக்கலின் நிலை குறித்து அவர்களிடம் தொடரிந்து கேட்டு வந்தோம். அடுத்த மேம்பாட்டில் (அப்டேடில்) இந்த வழு நீக்கப்படும் என்று கூறினர் – ஆனால் மேம்பாடு எப்போது வரும் என்பதை உறுதியாகக் கூறமுடியாது என்றும் சொல்லி வந்தனர்.
இந்தச் சிக்கலுக்கு கடந்தவாரம் தீர்வு கிடைத்தது. அண்மைய சியாவுமி, ரெட்மி, போக்கோ கருவிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட ஆண்டிராய்டை அந்நிறுவனம் வெளியிட்டது. எங்களிடம் உள்ளக் கருவிகளில் இந்த மேம்பாட்டைக் கண்டோம். மேம்படுத்தியதும், செல்லினத்தில் உள்ள மொழித்தேர்வு சரிவர இயங்கியது. சில பயனர்களும் அவரவர் கருவிகளில் இதனைக் கண்டதாக எங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
எந்தெந்தக் கருவிகளுக்கு இந்த மேம்பாடு கொடுக்கப்பட்டது என்னும் துல்லிய விவரங்களை சியாவுமி வெளியயிட்டுருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் கருவிகளில் புதிய மேம்பாடு கிடைக்கவில்லை என்றால் அவர்களிடமே தொடர்பு கொள்வது சிறப்பு.
செல்லினத்தில் எந்த சிக்கலும் இல்லை என்பதை மறுவ உறுதிபடுத்திய சியாவுமி நிறுவனத்திற்கும், செல்லினம் மேல் நம்பிக்கை வைத்து பொருமையோடு காத்திருந்த பயனர்களுக்கும் எங்கள் நன்றியைக் கூறிக்கொள்கிறோம்.
தொடர்புடைய பதிவு: