4.0.7 வெளியிடப்பட்டது

4.0.7-Released

கடந்த ஒரு வார காலமாக சில பயனர்கள் பயன்படுத்திப் பார்த்ததில், லெனோவோ A6000 கருவிகளில் உள்ளச் சிக்கல் இந்தப் புதிய 4.0.7ஆம் பதிப்பில் தீர்க்கப்பட்டுள்ளது உறுதியாகிவிட்டது. இன்னும் பலர் தேர்வுநிலைப் பதிப்பைப் பெற இயலாததால் தொடர்ந்து இதே சிக்கல் குறித்து எழுதி வருகிறார்கள். இப்பதிப்பின் முகான்மையானக் குறிக்கோள் லெனோவோ சில்லலைத் தீர்க்கவேண்டும் என்பதே. அது தீர்க்கப்பட்டதால், இதனை உடனே பொதுப் பயனீட்டிற்கு வெளியிடுகிறோம்.

இந்தப் பதிப்பில் உள்ள மேம்பாடுகள்:

  • லெனொவோ A6000 கருவியில் ஆண்டிராய்டு 5.0.2க்கும் மேம்படுத்தியவுடன் செல்லினம் இயங்குவதில் எற்பட்டுள்ள சிக்கலுக்கானத் தீர்வு.
  • தமிழில் ‘ஓம்’ (ௐ) சின்னைத்தைத் தட்டச்சிட வாய்ப்பு வேண்டும் என சில பயனர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்காக அஞ்சல் அமைப்பில் OM (அல்லது ooM) விசைகளிலும், தமிழ்99 அமைப்பில் ‘ஓ’ விசையின் நீண்ட அழுத்தத்திலும் (long press), இந்தச் சின்னம் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்திய ரூபாய் சின்னம் சின்னங்களுக்கான விசைமுகத்தின் (symbols keypad) முதற் பக்கத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. முன்புபோல் நீண்ட அழுத்தத்தின்வழியே பெறவேண்டும் என்ற நிலை இனி இல்லை.
  • [புதியது] செல்லினத்தில் உள்ள ஆங்கில விசைமுகங்களைப் பயன்படுத்தும்போது, இந்திய ரூபாய் சின்னம் போன்ற சிற்சில அடிப்படை இந்தியப் பயன்பாட்டுத் தேவைகள் உள்ளன. இதற்காகவே ‘ஆங்கிலம் (இந்தியா)’ எனும் புதிய விசைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது. இனி ஆங்கிலத்தில் அமெரிக்கா, யூ கே விசைமுகங்களோடு இந்திய-ஆங்கில விசைமுகமும் இருக்கும். ஆனால் சொற்பட்டியலில் எந்த மாற்றமும் இந்தப் பதிப்பில் இல்லை. மூன்று ஆங்கில விசைமுகங்களுக்கும் ஒரே ஆங்கிலச் சொற்பட்டியல்தான்.
  • [புதியது] செல்லினம் இணையதளத்தில் வெளியிடப்படும் (இதுபோன்றக்) கட்டுரைகளில் பயனர்களின் கருத்துகளும் இடம்பெறவேண்டும் எனும் நோக்கில் செல்லினம் செயலியிலேயே கருத்துகளைப் படிப்பதற்கும் பதிவதற்கும் உரிய வசதி, இந்த 4.0.7ஆம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே கருத்துகளை எழுதுவதற்கு கணினிக்குச் சென்றோ அல்லது செல்லினத்தை விட்டு வெளிவந்து உலாவிகள் (browser) வழி மட்டுமே கட்டுரைகள் தொடர்பானக் கருத்துகளைக் கூறவேன்றும் என்ற நிலை இனி இல்லை. கட்டுரைகளைப் படித்தவுடன் அங்கேயே கருத்துகளையும் படிக்கலாம், பதியலாம்.

இந்தப் பதிப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்! மேம்படுத்தியவுடன் உங்கள் கருத்துகளை இங்கே கூறுங்களேன் 😊

செல்லினத்தின் கூகுள் பிளே இணைய முகவரி

Sellinam Setup showing English - India

‘ஆங்கிலம் (இந்தியா)’ புதிய சேர்க்கையைக் காட்டும் செல்லினத்தின் அமைப்புப் பக்கம்.

Did you like this? Share it: