சொற்பட்டியல் சேமிப்பும் ஒருங்கிணைப்பும்

சொற்பட்டியல் செல்லினத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்று. பரிந்துரைகள், பிழைதிருத்தம், சுருக்கெழுத்து முதலிய அனைத்து வசதிகளுமே செற்பட்டியலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொற்றொடர்களையும் அவற்றை எளிதாகப் பெறுவதற்கான சுருக்கெழுத்துகளையும் எப்படிச் சேர்க்கலாம் என்பதை முந்தையக் கட்டுரையில் கண்டோம். இந்தக் கட்டுரையில் இந்தச் பட்டியல் எவ்வாறு சேமிக்கப்படுகின்றது என்பது பற்றியும், தனிப்பட்டப் பயனுக்காகச் சேர்க்கப்பட்டச் சொற்களை எப்படி நமது மற்ற ஆண்டிராய்டு கருவிகளுகளிலும் எளிதாகச் செலுத்துவது என்பது பற்றியும் காண்போம்.

செல்லினத்தின் சொற்பட்டியல்

பரிந்துரைக்கப்படும் சொற்கள் மூன்று இடங்களில் இருந்து வருகின்றன:

  1. செல்லினத்தில் சேர்க்கப்பட்டுள்ள 100,000க்கும் மேற்பட்டத் தமிழ்ச் சொற்கள் அடங்கிய சொற்பட்டியல்
  2. உங்களின் தொடர்புகளின் பெயர் பட்டியல் – தமிழில் இருக்கும் பெயர்கள் தமிழில் எழுதும்போது சேர்க்கப்படும் ஆங்கிலத்தில் இருக்கும் பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதும்போது சேர்க்கப்படும்
  3. உங்களின் தனிப்பட்ட சொற்பட்டியல்

செல்லினத்தின் சொற்பட்டியல்

இந்தப்பட்டியலில் உள்ள சொற்களை திருத்தவோ நீக்கவோ பயனர்களுக்கு வழி இல்லை. இந்தப்பட்டியல் செல்லினத்தைப் பதிப்பிற்கும்போது மட்டுமே எங்களால் மாற்ற இயலும். பிழைகள் இருப்பின் புதிய பதிப்பில் மட்டுமே திருத்தப்படும்.

தொடர்பு விவரங்களின் பட்டியல்

இது ஆண்டிராய்டு இயக்கத்தால் பராமரிக்கப்படுகிறது. தொடர்புகளின் பெயர்களைத் தமிழில் சேமித்து வைத்தால் அப்பெயர்களை எழுதும்போது பரிந்துரைகளின் வழி விரைவாக எழுதிவிடலாம்.

தனிப்பட்ட சொற்பட்டியல்

இதுவும் ஆண்டிராய்டு இயக்கத்தால் பராமரிக்கப்படுகிறது. என்றாலும், செல்லினத்தின் வழி இந்தப்பட்டியலில் சொற்களைச் சேர்க்கலாம், திருத்தலாம், நீக்கலாம். மேலும், இந்தப்பட்டியல் செல்லினத்தின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் உரியது அல்ல. இது உங்கள் சொற்பட்டியல்! எனவே நீங்கள் பயன்படுத்தும் மற்ற தமிழ் உள்ளீட்டு முறைகளும் நீங்கள் உரிமம் வழங்கினால் பயனபடுத்தலாம்.

ஒருங்கிணைப்பு

உங்களிடம் கூகுள் கணக்கு இருந்தால், உங்கள் தொடர்புகள் பட்டியலும் தனிப்பட்ட சொற்பட்டியலும் கூகுள் பிளே சேவையின்வழி பாதுகாக்கப்படும். நீங்கள் பயன்படுத்தும் அனைத்து கருவுகளிலும் இவ்விரு பட்டியல்களும் ஒருங்கிணைக்கப்படும். ஆனால் அனைத்து கருவிகளிலும் ஒரே கணக்கை பதிவு செய்யவேண்டும்.

தனிப்பட்ட சொற்பட்டியலை செல்லினத்தின் வழியே ஒருங்கிணைக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்குத் தேவை உங்கள் மின்னஞ்சல் முகவரி மட்டுமே. நீங்கள் ஒருங்கிணைக்க விரும்பும் அனைத்து கருவிகளிலும் அதே மின்னஞ்சலை செல்லினத்தில் செலுத்தினால், செற்கள் சேர்க்கப்படும்போதும், திருத்தப்படும்போதும் உங்கள் எல்லா கருவிகளுக்கும் செல்லினம் செய்தியை அனுப்பி பட்டியலை சமமாக்கிவிடும். இதற்கான வழிமுறைகளை கீழுள்ள படங்களில் காணலாம்.

சொற்பட்டியல் ஒருங்கிணைப்பு

முயன்று பாருங்களேன்!

தொடர்புடையக் கட்டுரை:
1. புதிய சொற்களைச் சேர்க்கும் வழிகள்!
2. விரைவாகத் தட்டெழுத உதவும் சுருக்கெழுத்து

Did you like this? Share it: