இலவச மின்னூல் வடிவில் செல்லினத்தின் பதிவுகள்!

பதிப்புத்துறையை சார்ந்தவர்களுக்கிடையே மின்னூல் தொழிநுட்பத்தைப் பற்றியக் கலந்துரையாடல்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததுக் கொண்டே இருக்கிறது. வருகின்றன காலத்தில், நூற்பத்திப்பு என்றாலே மின்னூல்களில் இருந்துதான் தொடங்கப்போகிறது என்பதில் ஐயமில்லை.

மின்னூல் பயன்பாடு

தமிழ் நூல்களைப் பொருத்தவரை இந்த மின்னூல் தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பேறு என்று சொல்லலாம். குறைந்த விலையில் ஓரிடத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூலை, உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு உடனே அனுப்பி வைக்கக்கூடிய வைப்பை இந்த மின்வடிவம் நமக்கு வழங்குகிறது.

‘கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல் உருவாக்கம்’ என்னும் தலைப்பில் 2011ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு மாநாட்டில் முத்து நெடுமாறன் படைத்தக் கட்டுரையை மின்னூல் வடிவிலேயே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

மின்னூல்கலைப் படிப்பதற்காக கணினிகளிலும் கையடக்கக் கருவிகளிலும் தற்போது ஏராளமான செயலிகள் இலவசமாகவே கிடைக்கின்றன. ஆப்பிள் கணினிகளிலும் ஐ-போன் ஐ-பேட் கருவிகளிலும் ஆப்பிள் நிறுவனமே வழங்கும் ‘ஐ-பூக்’ செயலி மிகச் சிறந்த நூல் அனுபவத்தை நமக்குத் தருகிறது. விண்டோஸ் கணினிகளில் அடோபி நிறுவனம் இலவசமாக வழங்கும் ‘அடோபி டிஜிட்டல் எடிஷன்ஸ்‘ செயலியும், ஆண்டிராய்டு கருவிகளில் கூகள் வழங்கும் ‘கூகள் பிளே புக்ஸ்‘ செயலியும் சிறப்பாகவே இருக்கின்றன. தமிழ் நூல்களை எந்தத் தடையும் இன்றி இவை வழங்குகின்றன.

கடந்த ஓராண்டு காலமாக செல்லினம்.காம் தலத்தில் வெளிவந்த கட்டுரைகளை, மின்னூல் வடிவில் தொகுத்து இங்கே வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். செல்லினத்தில் உள்ள தமிழ் விசைமுகங்களின் பயன்பாடு, புளூ தூத் விசைப்பலகைகளைக் கொண்டு செல்லினத்தின் வழி தமிழ் உள்ளீடு, தனிப்பட்ட சொற்பட்டியல் பராமரிப்பு போன்றக் கட்டுரைகள் புதிய பயனர்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறோம். மேலும், மின்னூல் வடிவில் இருக்கும் இந்தக் கட்டுரைகளைப் பதிவிறக்கம் செய்தபின் இணைய தொடர்பு இல்லாமலேயே எந்த நேரத்திலும் படிக்கலாம்.

தொடர்ந்து செல்லினம்.காம் தலத்தில் வெளிவரும் கட்டுரைகளை அவ்வப்போது இதுபோலவே தொகுத்து வழங்கலாம் எனத் திட்டம்மிட்டுள்ளோம். தமிழ் மின்னூல்களின் பயன்பாட்டை இதன்வழி மென்மேலும் அதிகரிக்கலாம் என்பதும் எங்கள் எண்ணம். தமிழ் நூல்களை மின்வடிவில் வாசிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதுதான் நூலாசிரியர்களும் அதிகமாக இந்த புதிய, மிகவும் பயனுள்ள வடிவில் தங்கள் படைப்புக்களை வெளியிட முன்வருவார்கள்.

அதுபோல் முன்வந்துள்ள ஒரு இலக்கியப் படைப்பாளர் வழங்கி இருக்கும் மின்னூல் படைப்புகளை, அடுத்தக் கட்டுரையில் காட்டுகின்றோம். அதற்குள் உங்கள் கணினியிலோ கையடக்கக் கருவியிலோ இங்கு வழங்கப்பட்டிருக்கும் மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்து, அவை சரிவரத் தோன்றுகின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சிக்கல் இருப்பின், கீழுள்ள ‘கருத்துகள்’ பகுதியில் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள். அவை மற்றவர்களுக்கும் பயனளிக்கும்!

இணைப்புகள்:

தமிழில் மின்னூல்கள்

Did you like this? Share it: