வணக்கம்
கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச்சு திங்களில் செல்லினத்தின் நான்காம் பதிப்பு ஆண்டிராய்டு கருவிகளுக்காக வெளியிடப்பட்டது. உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பயனர்கள் இந்தப் புதிய பதிப்பினைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் பலர், தங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பதிப்பை மேம்படுத்தியும் உள்ளனர்.
கையடக்கக் கருவிகளில் தமிழ் உள்ளீட்டை, செல்லினம் எந்தெந்த வகையில் எளிமையாக்குகிறது என்பதை விளக்கும் கட்டுரைகளையும், தொழில்நுட்பத்தில் தமிழ் அடைந்து வரும் மேம்பாடுகள் குறித்த கட்டுரைகளையும் அவ்வப்போது செல்லினம்.காம் தலத்தில் வெளியிட்டு வந்துள்ளோம்.
இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து மின்னூலாகப் பதிப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். புதிதாக சேர்ந்துள்ள நண்பர்களுக்கு இந்நூல் பயனளிக்கும் என நம்புகிறோம்.
அன்புடன்,
மேலும் நூல்கள்:
கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல் உருவாக்கம்