ஐபேட் ஏர் ரக கைக்கணினி திறன்கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். சாதாரண ஐபேட், ஐபேட் புரோ, ஐபேட் ஏர் எனப் பல வகைகள் வெளிவந்து நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டன. எந்த ஐபேட் திறன்கருவியை வாங்குவது என்பதே அந்தக் குழப்பம். சில ஐபேட் கருவிகளின் அடிப்படை அம்சங்கள், விலையைப் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு ஐபேட்களும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. மிகவும் குறைந்த விலையிலானதிலிருந்தே நாம் தொடங்குவோம். சாதாரணமான 128ஜிபி சேமிப்பகம் கொண்ட ஐபேட் 349$ லிருந்து தொடங்குகிறது . அதிக விலை ஐபேட் எனில் அது 13-இன்ச் ஐபேட் புரோ தான். இது 2TB சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளது. இது விலை $2,599க்கு சந்தைக்கு வருகிறது. அதாவது, மலிவான ஐபேடுக்கும் பட்டியலில் உள்ள மிகவும் விலையுயர்ந்த ஐபேடுக்கும் இடையே $2,250 விலை வித்தியாசம் உள்ளது.
சேமிப்புத் திறன், வைஃபை இணைப்பு போன்றவையே ஐபேடின் அதிக விலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. பொதுவான ஐபேட் ரகங்களில் வைஃபை வசதி உள்ளது. ஆனால் உங்களுக்கு செல்லுலார் இணைப்பு தேவைப்பட்டால் $150 முதல் $200 வரை செலவு செய்து அதனை மேம்படுத்த வேண்டியதாயிருக்கும்.
அதிக சேமிப்பு திறன் உங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் அதற்கு அதிகளவில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக 13 இன்ச் ஐபேட் புரோவில் வெறும் 512ஜிபி சேமிப்பகத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் நீங்கள் 1500டாலர் செலவழிக்க வேண்டும்.
திரையின் அளவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஐபேட் மினியைத் தவிர , பெரிய திரைகளுக்கு நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஐபேட், ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் புரோ ஆகியவை 11-இன்ச் திரையைக் கொண்டுள்ளன. இவை அதிக தெளிவுத்திறன் மற்றும் உயர் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஐபேட் மினி தன் பெயரைப் போலவே 8.3-இன்ச் திரையைக் கொண்டுள்ளது. கொஞ்சம் சிறிய விரல்களைக் கொண்ட நபர்கள் கூட இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
1TB அல்லது 2TB சேமிப்பு திறன் கொண்ட ஐபேட் புரோ ரகங்களில் Nano-texture glass ஐப் பயன்படுத்துவதற்கான அம்சமும் உள்ளது. இது சுற்றுச்சூழல் வெளிச்சம் அதிகமாக இருந்தாலும் திரையினை எளிதாகப் பயன்படுத்த உதவி புரிகிறது. ஐபேட்களைப் பற்றிய சுருக்கமான குறிப்புதான் இது. இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், இந்த தளத்தில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
- மு.இசக்கிமுத்து.
