அன்னையர் நாள் பரிசுப் பரிந்துரைகள்

அன்னையர் நாளுக்கு, வீட்டு உபயோகப் பொருள்களை பரிசளிக்கும் வழக்கம் குறைந்திருக்கிறது. குடும்பத்துக்குத் தேவையானவற்றைக் கொடுக்காமல், புடைவை, ஆபரணங்கள் என்று அம்மா தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் பரிசுகள் வழங்குவது நல்லதுதான். அதோடு காலத்துக்கு ஏற்ற வேறு சில பரிசுகளையும் தர முயற்சி செய்யலாம். அப்பரிசுகளால் உங்கள் இருவருடைய மகிழ்ச்சி, இரட்டிப்பாகும்தானே.

அன்றாட வாழ்வில் பயன்படும் வகையில் பல விலை வரம்புகளில் இருக்கும் சில சுவாரஸ்யமான தொழில்நுட்பக் கருவிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். பரிசு கொடுக்க இந்தப் பரிந்துரைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.

Mothers day
  • தொலைக்காட்சித் திரையைவிடச் சிறியது, திறன்பேசித் திரையைவிடப் பெரியதுமான அமேசான் எகோ ஷோ 8, கூகுள் நெஸ்ட் ஹப் போன்றவை நல்ல தேர்வு. இச்சிறிய தொலைக்காட்சிகளை பல்வேறு விதமாகப் பயன்படுத்தலாம். தானியக்க தொழில்நுட்பக் கருவிகளை குரல் கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்ளப் பயன்படும். வலைபரப்பு, பிடித்த நிகழ்ச்சிகளை வீட்டுக் கூடத்தில் இருக்கும் தொலைக்காட்சியில்தான் பார்க்கவேண்டும் என்கிற அவசியமின்றி எங்குவேண்டுமானாலும் பார்க்க இக்கருவி உதவும். இரு கைகளும் வேலையாக இருக்கும்போது, தொடுதல் இல்லாமல் திறன்பேசி அழைப்புகளைப் பெறப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வானிலை முன்னறிவிப்புகளைக் கூடப் பார்க்க முடியும்.
  • உடல் நலனைப் பேணிக்காக்க உதவும் திறன்கடிகாரங்களைப் பரிசாகக் கொடுப்பதன் மூலம் அம்மாவின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வலியுறுத்தலாம். கார்மின் வெனு 3S, ஆப்பிள் கைக்கடிகாரம் 9 ஆகியவை பல புதிய பாணிகளில், பல வண்ணங்களில் கிடைக்கின்றன. இதில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணர்திறன்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக இவற்றின் மூலம் இரத்த ஆக்சிஜன் அளவையும், இதயத் துடிப்பு வீதத்தையும் கண்காணிக்கலாம். 10 நாள்கள் வரை மின்னேற்றம் செய்ய அவசியமின்றிப் பயன்படுத்த முடியும். மேலும் மிகுந்த பாதுகாப்பான கண்ணாடிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உடல்நலத்துடன் மன மகிழ்ச்சியும் முக்கியம். வாசிப்பு ஆர்வமுள்ள அம்மாக்களுக்கு அமேசான் கிண்டில், கோபோ மின்படிப்பான் சிறந்த பரிசுகளாக இருக்கும். இதில் வரம்பற்ற சந்தா மூலம் பல நூல்களை வாசிக்கலாம். அதன் 6 அங்குல திரை, வாசிப்பை மேலும் எளிமைக்கும். மேலும் மின்கல அடுக்கு 6 வாரங்கள் வரை நீடிக்கும். ஒலிப் புத்தகங்களாகக் கேட்கும் வாய்ப்பும் இருக்கிறது.
  • சாம்சங் கேலக்ஸி A55 5G, கூகுள் பிக்சல் 9a ஆகிய திறன்பேசிகள் சிறந்த திரையுடன் வருகின்றன. டென்சர் G4 மின்னணு கூறுகள், 8GB அளவு தரவு சேமிப்பு கொண்டது. இதன் மின்கலன் 2 நாள்கள் வரை நீடிக்கும். சிறந்த புகைப்படகருவி மூலம் வாழ்வில் முக்கியமான தருணங்களை சேமிக்கலாம். கூகுள் பிக்சல் 7 ஆண்டுகள் வரை மென்பொருள் புதுப்பிப்புகளை வழங்குகிறது. 

இந்த பரிசுகள் உங்கள் அம்மாவின் அன்றாட வாழ்க்கையைக் கொண்டாட்டமானதாக்கக் கூடும். அன்னையர் நாள் வாழ்த்துகள்.

  • சத்யா கோபாலன்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now