கூகுள் கொடுக்கும் பரிசு

கூகுள் எப்போதாவது தன் பயனர்களுக்காகக் கூடுதலாக ஏதாவது சலுகை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாகக் கடந்த ஆண்டு காமிக் – கான் மற்றும் ஜி ஸ்டார் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் தங்கள் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான நபரின் சிறப்பிடத்தை வழங்குவதற்காக அவர்களுக்கு விளையாட்டு புள்ளிகளை இலவசமாக வழங்கியது. இதே முறையை தற்போது தொழில்நுட்ப நிறுவனமான ரோப்லாக்ஸுடனும் இணைந்து வழங்கவுள்ளது. 

Roblox

ரோப்லாக்ஸ் என்பது குழந்தைகள் விளையாட்டுகளை உருவாக்கி விளையாடுவதற்காகப் பரவலாகப் புகழ்பெற்றுள்ள ஓர் இணைய விளையாட்டுத்தளம். ரோப்லாக்ஸ் ஒரு விளையாட்டு அல்ல, இது விளையாட்டுகளை உருவாக்குபவர்களால் தயாரிக்கப்பட்ட தளம். ரோப்லாக்ஸை வேறுபடுத்துவது என்னவென்றால் அதில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் அதன் பயனர்களால் உருவாக்கப்படுகின்றன. ரோப்லாக்ஸில் உள்ள விளையாட்டுகள் அனைத்தும் பயனர்களின் படைப்பாற்றல், கற்பனையைப் பொறுத்தது. பிற பயனர்கள் உருவாக்கிய விளையாட்டுகளைப் பலரும் விளையாடலாம். 

கூகுள், ஜூன் 5 முதல் ஜூலை 2 வரை ரோப்லாக்ஸில் விளையாடும் தங்கள் உறுப்பினர்களுக்கு ஒரு சந்தா பகுதியை இலவசமாகப் பார்வையிடும் அனுபவத்தையும் புதிய சலுகைகளையும் வழங்கவுள்ளது. இந்த சலுகை அனைத்து நாடுகளிலும் கிடைக்கும். புதிதாக கூகுள் கொடுத்துள்ள சந்தா பகுதியில் விளக்கங்களுடன் கூடிய தடைகளைக் கொண்ட ஓர் அனுபவப் பகுதி, ரத்தினங்கள் அடங்கிய பகுதி, சிறப்பு வாயில்கள் கொண்ட பகுதி, வாரந்தோறும் கிடைக்கும் பரிசுகள் மற்றும் பிற சிறிய விளையாட்டுகள் ஆகியவை இருக்கும். 

நீங்கள் ரோப்லாக்ஸின் வைரம், பிளாட்டினம் அல்லது தங்கப் புள்ளிகளைப் பயன்படுத்தும் உறுப்பினராக இருந்தால் நீங்கள் மேலும் சிறப்பு வாய்ந்த மிக முக்கியமான சிறப்புப் பகுதியையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு உங்களுக்குத் தொழில்நுட்ப பொருள்களும் கிடைக்கும் ஆனால் நீங்கள் இதை அணுக உங்கள் விளையாட்டு புள்ளிகள் கணக்கை ரோப்லாக்ஸுடன் இணைக்க வேண்டும். மேலும் அனைத்து உறுப்பினர்களும் தனித் தனி பொருள்களைப் பெறும் வாய்ப்பும் வழங்கியுள்ளது. 

கூகுள் தங்கள் சிறப்புப் புள்ளிகளைப் பயன்படுத்தி வாங்கக் கூடிய புதிய பொருள்கள், சேகரிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாகவும்  இதில் ஆண்டிராய்டு, யூடியூப், குரோம் போன்ற பிரபல நிறுவனங்களும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now