நானோ பனானா ருசிப்பது எப்படி?

செயற்கை நுண்ணறிவை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை, மனிதர்களிடமிருந்தே செயற்கை நுண்ணறிவு கற்றுக்கொள்ள வேண்டும் எனும் அளவிற்கு நிலைமை மாறி வருகிறது. சில மாதங்களுக்கு முன்தான் கிப்லி செயற்கை நுண்ணறிவு படங்கள் ஒரு புயலை கிளப்பியிருந்தன. அந்த புயலின் தாக்குதலிலிருந்து மீண்டுவரும் இணையத்தில், மறுபடியும் நேனோ பனானா என்ற புதிய புயல் ஒன்று வீசிவருகிறது.

கடந்த சில நாள்களாகவே சமூகவலைத்தளச் செல்வாக்காளர்கள் பலரும் நேனோ பனானா செயற்கை நுண்ணறிவு முப்பரிமாண படங்களை பகிர்ந்துவருகின்றனர். அதைப் பார்க்கும் ரசிகர்களும், நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா என நேனோ பனானாவை பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்கி வருகின்றனர்.

நேனோ பனானா என்றால் என்ன என்பதை புரட்டிப் பார்த்தால், கூகுளே அதற்கு காரணமாக இருக்கிறது. கூகுளின் ஜெமினி ஏஐ 2.5 ஃப்ளாஷ் இமேஜ் டூல் என்ற மென்பொருள் மூலம் இந்த படங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த நானோவால் படம் வரைய முடியும். அத்துடன் அதை நாம் விரும்பும் வண்ணம் திருத்த​வும் முடியும்.

திருத்தப்பட்டதே தெரியாதபடி கச்சிதமாக வேலையை முடிக்கிறது நானோ பனானா. இதன் திருத்தும் விதம் சாதாரணமாக இல்லாமல், உண்மைத் தன்​மையோடு இருக்கிறது.

நாம் இதுவரை ஃபோட்டோஷாப்பில் வெகுநேரம் சிரமப்பட்டுச் செய்யும் திருத்தங்களை, எளிதாக சொற்குறிப்பு வழங்குவதன் ​மூலம் செய்யமுடியும். எடுத்துக்காட்டாக, படத்தில் ஒரு நபரின் உடையை மாற்றுதல், பழைய படங்களை மறுஉருவாக்கம் செய்வது என நீண்ட பட்டியல் உள்ளது. இதனை ஜெமினி செயலியிலும் பயன்படுத்தலாம் அல்லது, aistudio.google.com என்ற இணைய தளத்திலும் உருவாக்கிக்கொள்ளலாம்.

அதில் உங்களுக்கு தேவையான படத்தை கொடுத்தால் சில நொடிகளிலேயே அழகான படத்தை உருவாக்கி தந்துவிடும் இந்த நானோ பனானா. முக்கியமான ஒன்று கொடுக்கப்படும் படங்கள் கொஞ்சம் தெளிவாக இருக்க வேண்டும். இப்போது கணினி முன் நிற்பது போன்று வைரலாகும் படத்தை உருவாக்குவதற்கான சொற்குறிப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

Create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, in a realistic style, in a real environment. The figurine is placed on a Computer desk. The figurine has a round transparent acrylic base with no text on the base. The content on the computer screen is a 3D modeling process of this figurine. Next to the computer screen is a toy packaging box, designed in a style reminiscent of high-quality collectible figures, printed with original artwork. The packaging features two-dimensional flat illustrations.

இதனை நகல் எடுத்து அப்படியே பயன்படுத்தலாம். இது பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் சொற்குறிப்பு ஆகும். இந்த சொற்குறிப்பை திருத்தி அமைத்தும் தேவையான விதத்தில் படங்களை பெற்றுக் கொள்ளலாம். அப்புறம் என்ன உங்கள் நண்பர்களுக்கு படத்தை பகிர்ந்து அவர்களின் ஆசையை தூண்டுவது மட்டும்தான் பாக்கி.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now