செல்லினம், முரசு அஞ்சல் வடிவமைப்பாளரும் உருவாக்குநருமான முத்து நெடுமாறன் பெர்னாமா தொலைக்காட்சிக்காக நேர்காணல் அளித்திருந்தார். மறுஒளிபரப்பாக ஆகஸ்ட் 22, சனிக்கிழமையன்று மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

மலேசியாவின் பெர்னாமா தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது பார்வை நிகழ்ச்சி. ஆகஸ்ட் 16, 2026, ஞாயிற்றுக் கிழமை மாலை 7.30 மணிக்கு இலக்கவியலில் தமிழ் மொழி என்ற தலைப்பில் முத்து நெடுமாறனிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
தமிழ் மொழியின் மரபினைப் பற்றியும் தற்போதைய செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இம்மொழி அடைந்துள்ள மாற்றங்கள் பற்றியும் இவ்வுரையாடல் அமைந்திருந்தது. தமிழ் மொழியின் இன்றைய நிலை மட்டுமல்லாது எதிர்காலத்தில் செய்யப்படவேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்கள் குறித்தும் கருத்துகளை முத்து நெடுமாறன் பகிர்ந்துகொண்டார்.
மறுஒளிபரப்பாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30க்கும் ஒளிபரப்பானது இந்நிகழ்ச்சி.
ஆகஸ்ட் 22, சனிக்கிழமை காலை 11.30 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
* தொலைக்காட்சி அலைவரிசை: பெர்னாமா செய்தி நிறுவனம் (Bernama)
* அலைவரிசை எண்கள் (TV Channels): Astro 502, unifi TV 631, MYTV 121
* யூடியூப்: Bernama Seithigal @bernamaseithigal9987
