இயங்குபடத்துடன் கூகுள் மெசேஜஸ்

கூகுள் மெசேஜஸ் குறுஞ்செய்திச் செயலியில், திரையின் கீழிருந்து குறுஞ்செய்திகளைத் பெறுவது போன்ற புதிய இயங்கு படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Google Messages

கூகுள் மெசேஜஸ் (Google messages) என்பது கூகுளின் ஆண்டிராய்டுக்காக உருவாக்கப்பட்ட குறுஞ்செய்திச் செயலியாகும். இது வழக்கமான குறுஞ்செய்திச் சேவை, படங்கள் காணொளிகளைப் பகிர உதவும் RCS சேவை , உடனடி செய்தியிடுவதற்கான சேவை ஆகியவற்றின் மொத்த உருவமாகக் கட்டமைக்கப்பட்டது. இதில் அண்மை ஆண்டுகளில் பல்வேறு மேம்படுத்தல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குழு அரட்டைகளைத் தொடங்குதல், குறிப்பிட்ட செய்திகளுக்குப் பதிலளிப்பது, அரட்டைகளுக்கு உணர்ச்சிக்குறி எதிர்வினைகளை வழங்குதல் போன்ற பிற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வாட்சாப் போன்ற முன்னணி அரட்டைச்செயலிகள் வழங்கும் பெரும்பாலான அம்சங்கள் கூகுள் மெசேஜஸ் செயலியிலும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான புதிய ஆன்டிராய்டு திறன்பேசிகளில் கூகுள் குறுஞ்செய்திகள் முன்னரே நிறுவப்பட்டு பயனர்களைச் சேர்கின்றன‌. அதோடு பெரும்பாலும் இயல்புநிலை (Default) செய்தியிடல் செயலியாகவும் வழங்கப்படுகிறது. இது உங்கள் இணைய வழங்குநரின் உதவியோடு நீங்கள் பெறும் எழுத்துக் குறுஞ்செய்தி மற்றும் மல்டிமீடியா குறுஞ்செய்திகளைக் காண்பிக்கும் வகையில் செயல்படுகிறது.

நீங்கள் காணொளிகள், படங்களைப் பகிரும்போது, உங்கள் அருகலையைப் (WiFi) பயன்படுத்தியோ அல்லது இணைய இணைப்பைப் பயன்படுத்தியோ அந்த பரிமாற்றம் செய்யப்படுகிறது. இணைய இணைப்பிற்கான வழியில்லை எனில், SMS அல்லது MMS மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பும் வகையில் தன்னை மாற்றியமைத்துக்கொள்கிறது கூகுள் மெசேஜஸ் செயலி.

இதில் இப்போது அரட்டைகளை அலங்கரிக்கும் வகையில் புதிய அதோடு சிறிய மாற்றம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பெல்லாம் நீங்கள் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பும்போதோ அல்லது பெறும்போதோ, அரட்டையில் அந்த குறுஞ்செய்தி இணைவது சாதாரணமாகத்தான் இருக்கும். இப்போது அதை மாற்றும் வகையில், திரையின் அடிப்பகுதியிலிருந்து நேரடியாகத் தோன்றும்.

ஒரு பூ மலர்வதைப் போன்று உங்கள் குறுஞ்செய்திகளும் மலர்கின்றன. ஒவ்வொரு புதிய குறுஞ்செய்தி வரும்பொழுதும், ஒரு புது அனுபவத்தை தருகிறது இந்த அம்சம். உங்கள் உரையாடலை மேலும் அழகுபடுத்தும் வகையில் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தைப் பெறுவதற்குக் கூகுள் மெசேஜஸ் செயலியின் அண்மைப் பதிப்பைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

  • மு.‌இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now