கூகுள் விசைப்பலகை

கூகுள் விசைப்பலகை செயலியின் அமைப்புகளை பயனர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையிலான புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கூகுள் விசைப்பலகை செயலியின் அமைப்பு உள்ளடக்கத்திலிருந்து ஒரு தேவையான அம்சத்தை, தேடிக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிக்கலானது என்று உங்களுக்குத் தெரியும். இப்போது கூகுள் அந்தப் பிரச்சினையை கண்டறிந்து​, முழு உள்ளடக்கத்தையும் மறுசீரமைத்துள்ளது. கூகுள் விசைப்பலகை செயலி புதிய தோற்றத்துடனும், உள்ளடக்கத்தில் பல்வேறு மாற்றங்களுடன் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

முதலாவதாக முன்னுரிமைகள் (Preferences) பிரிவானது நீண்ட, ஒற்றைப் பட்டியலாக இருந்துவந்தது. இதனால், ஒவ்வொரு முறையும் சிறிது தேடலுக்கு பின்னரே தேவையானவற்றை கண்டுபிடிக்க முடிந்தது. இப்போதைய புதிய அமைப்பில் அனைத்து அம்சங்களும், தெளிவாக தனித்தனி வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக வழங்கப்பட்டுள்ள குறுக்கு வழிகள் (Shortcuts) பிரிவில், இரட்டை இடைவெளி, புள்ளி வைத்த பிறகு தானாக இடைவெளி தோன்றுவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. கீ டேப் பிரிவானது ஒலி, கீ பாப்-அப்கள், குறியீட்டு தெரிவுநிலை போன்றவற்றை தொகுத்து வழங்குகிறது.

அடுத்து முக்கியமான ஒன்றாக, அம்சங்களை பயன்படுத்துவதற்கும் முடக்குவதற்கும் மாத்திரை போன்ற வடிவமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பழைய உரை திருத்த உள்ளடக்கம் திருத்தங்கள், பரிந்துரைகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சமும் தனித்தனியான வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தானியங்கி திருத்தங்கள், எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை, பரிந்துரைகள், எழுதும் கருவிகள் போன்றவை அதற்குள்ளாக வழங்கப்பட்டுள்ளன. பிக்சல் 10, QPR2 பீட்டா பயனர்களுக்கு இந்த புதிய வடிவ அம்சங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இவற்றுடன் பரிந்துரைப் பட்டையில், சொல் பரிந்துரைகள் தோன்றுகிறதா என்பதைக் கட்டுப்படுத்த ஒரு தனித்துவமான நிலைமாற்றமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சமும் தற்போதைய பீட்டா பதிப்பு 15.8.5 உடன் வெளியாகியுள்ளது.

இந்தப் புதுப்பிப்பு கூகுள் விசைப்பலகை செயலியில் பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டுவரவில்லை. ஆனால் பயனர்களின் நேரத்தை மீதமாக்குகிறது. அவசரமான நேரத்திலும் எளிதாக, தேவையான அம்சங்களை தேர்ந்தெடுக்க உதவுகிறது. எளிமையாக தட்டச்சு செய்ய விரும்​பும் பயனர்களுக்காகவே கூகுள் இந்த அம்சங்களை வழங்கி இருக்கிறது.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now