திறன்பேசிகளை உற்பத்தி செய்யும் உலகளாவிய நிறுவனங்களுல், முதன்மையான இடத்தில் உள்ளது சீனாவின் வாவே நிறுவனம். இவ்வாண்டு சூலை மாதம், கொரியாவின் சாம்சங் நிறுவனைத்தை முந்திக்கொண்டு, பட்டியலில் முதல் இடத்தையே பெற்றது, வாவே.

கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் முதல், வாவே நிருவனம் உருவாக்கும் திறன்கருவிகளில், கூகுளின் திறன்கருவிகளுக்கான நுட்பக் கட்டமைப்பு (கூகுள் மொமைல் சர்விசஸ்) சேர்க்கப்படுவது நிருத்தப்பட்டது. இந்தக் கட்டமைப்பு இல்லாமல் கூகளின் பல சேவைகளை, வாவே கருவிகளில் பெற வாய்ப்பிருக்காது. அவற்றில் தலையாய ஒன்று கூகுள் பிளே செயலிக் கூடம்.
ஆண்டிராய்டில் இயங்கும் கருவிகளாக இருந்தாலும், அமேரிக்கா விதித்தத் தடையினால், வாவே கருவிகளில் கூகுள் பிளே சேர்க்கப்படுவது இயலாமல் போனது. இதற்கு ஒரு தீர்வாக ‘வாவே ஆப் கெலரி’ எனப்படும் தனது சொந்தச் செயலி கூடத்தை உருவாக்கி, வேவே தனது புதிய கருவிகளில் இதனைச் சேர்த்தது. கூகுள் பிளே போன்றே, இந்தச் செயலிக் கூடத்திலும் பயனர்கள் தேவைப்படும் செயலிகளைத் தேடிப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் செயலிகள் பெரும்பாலும், கூகுள் பிளே மட்டும் அல்லாமல், வாவே செயலிக் கூடத்திலும் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், செல்லினமும் சில வாரங்களுக்குமுன் சேர்க்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்குமுன் வெளிவந்த சேல்லினத்தின் ஐந்தாம் பதிகையின் முன்னோட்டப் பதிப்பும், பழைய செல்லினத்தின் மேம்பாட்டு பதிகையாக இன்று இக்கூடத்தில் சேர்க்கப்பட்டது! சேர்க்கப்பட்ட சில நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் தங்கள் புதிய வாவே கருவிகளில் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஆண்டிராய்டு 10இன் அடிப்படையில் அமைந்த வாவேயின் இயங்குதளத்தில், செல்லினத்தைக் கொண்டு பயனர்கள் இனி தடையின்றி தமிழில் எழுதலாம். ஆண்டிராய்டோடு வந்த தமிழ் இடைமுகமும் இந்தக் கருவிகளில் சேர்க்கப்பட்டுள்ளதால், செல்லினத்தையும் தமிழிலேயே இயக்கலாம்.
புதிய வாவே கருவிகளைப் பயன்படுத்தும் பயனர்கள், நேரடியாக செல்லினத்தைப் பதிவிறக்க இந்த இணைப்பைத் தட்டலாம்:
https://appgallery.huawei.com/#/app/C102988119
வாவே செயலிக் கூடத்தில் சொல்வளம்
செல்லினம் மட்டும் அல்லாமல், சொல் விளையாட்டான சொல்வளம் செயலியும் வாவே செயலிக் கூடத்தில் அண்மையில் சேர்க்கப்பட்டது.
சொற்களைத் தேடுவதை இலக்காகக் கொண்ட இந்த விளையாட்டு, மலேசியக் கல்வி அமைச்சினால் தேர்வு செய்யப்பட்டு அமைச்சின் செயலிகளுக்கான இணைய தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிராய்டிலும் ஐ.ஓ.எசிலும் இயங்கும் விளையாட்டு, சொல்வளம். இதனைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புகளைக் கீழே காணலாம்:
- ஆண்டிராய்டு:
https://play.google.com/store/apps/details?id=com.murasu.sol - ஐபோன்/ஐபேட்:
https://apps.apple.com/us/app/solvalam/id1081119097 - வாவே:
https://appgallery.huawei.com/#/app/C102981197

தொடர்புடையவை:
