ஐபோன் காற்று வீசுகிறது

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் ஏர் (iPhone Air) என்ற புதிய தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 5.6 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட இந்தக் கருவி, சக்திவாய்ந்த தொலைபேசியாக இருப்பதை முன்னிலைப்படுத்தாமல் மிக அழகான திறன்பேசியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

iPhone Air
iPhone Air

வடிவமைப்பே முக்கியச் சிறப்பு

6.5 அங்குல திரை கொண்ட ஐபோன் ஏர் கையில் மிதப்பது போன்ற உணர்வைத் தருகிறது. வேகமான செயலி அல்லது நீண்ட மின்கலன் ஆயுள் இதன் நோக்கமல்ல. மாறாக, உயர்தர கலைநுணுக்கம் கொண்ட ஒரு கருவியை வழங்குவதே இதன் இலக்கு. பத்து ஆண்டுகளுக்கு முன் மேக்புக் ஏர் (MacBook Air) அறிமுகமானபோது செய்தது போல் இப்போது திறன்பேசிக்கு முயன்றுள்ளனர். அழகுக்கே முன்னுரிமை தரும் வாடிக்கையாளர்களை ஆப்பிள் நன்கு அறியும்.

ஆடம்பரத்துடன் வரும் தேர்வுகள்

999 டாலர் விலை கொண்ட ஏர், சாதாரண ஐபோன் 17ஐ விட 200 டாலர் அதிகம். தனித்துவமான வடிவமைப்புக்காக இந்த விலை நியாயமானது. மின்கலன் 30 மணிநேரத்துக்குப் பதில் 27 மணிநேரமே இயங்கும். சில படக்கருவி அம்சங்களும் இல்லை. ஆனால் உலகின் மெல்லிய தொலைபேசிக்கு இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலை.

தொலைபேசி பற்றிய புதிய சிந்தனை

மேக்சேஃப் (MagSafe) மின்கலமேற்றி உபகரணங்களுடன் ஐபோன் ஏர்-ஐ பயன்படுத்த ஆப்பிள் பரிந்துரைக்கிறது. உயர்தர அனுபவத்தின் ஒரு பகுதியாக உபகரணங்களைக் கருதுகிறது.

மேம்பட்ட சில்லுகள், சிறந்த ஆற்றல் திறன், புரட்சிகர மெல்லிய தன்மை போன்ற தொழில்நுட்பங்களை ஐபோன் ஏர் காட்டுகிறது. இவை விரைவில் அனைத்து ஐபோன்களிலும் இடம்பெறும்.

ஐபோன் ஏர் அனைவருக்குமானது அல்ல. தொலைபேசியை நாகரிக அடையாளமாகக் கருதுபவர்களுக்கானது. புது பாணியிலான அனுபவத்துக்காக பயன்பாட்டு முறையை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர்களுக்கே இது பொருந்தும். ஆப்பிளின் வடிவமைப்பு ரசிகர்கள் இதற்காகவே காத்திருந்தனர்.

வடிவமைக்கும்போதே மெல்லிய புதுமையான ஐபோன் ஏர் வாங்குவதா அல்லது நிறைய வசதிகள் கொண்ட ஐபோன் புரோ 17 வாங்குவதா என வாடிக்கையாளர்கள் குழம்பவேண்டும் என நினைத்தார்களாம் ஆப்பிள் நிறுவனத்தினர். அவர்கள் எண்ணியதைப் போலவே வாடிக்கையாளர்களுக்கும் பிடித்துப்போய் இதுவா அதுவா என முடிவெடுக்கத் திணறுவதாக செய்திகள் வருவதால் ஆப்பிள் மகிழ்ச்சியில் இருக்கிறது.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now