இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

கூகுள் மொழிப் பயிற்சியாளர்
கூகுளின் செயற்கை நுண்ணறிவு கருவியான நோட்புக்எல்எம் (NotebookLM) வழியாக மொழி கற்றுக்கொள்வது எளிதாக இருக்கிறதாம். இணையத்தளம் ஒன்றில் தன்னுடைய அனுபவத்தைப் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். நோட்புக்எல்எம் ஆய்வுக் கருவி மட்டுமல்ல, மொழி கற்றலுக்கும்…

ஆண்டிராய்டு ஐஓஎஸ் கோப்பு பகிர்தல்
விரைவில் பகிரும் கூகுள் சேவை (Quick Share) இனிமேல் ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்க இருக்கிறது. ஆண்டிராய்டு கருவிகளுக்கிடையே கோப்புகளைப் பகிர்வதற்கான இந்த வசதி, இனி ஆப்பிளின் ஐஓஎஸ் இயக்க முறைமையிலும் செயல்பட உள்ளது.…

கூகுள் வரைபடத்தில் புது வசதி
கூகுள் மேப்ஸ் (Google Maps) பயன்பாட்டில் வரைபடங்களை தெருக்களாகப் பார்க்கும் கோணத்தில் இருந்து செயற்கைக்கோள் கோணத்தில் பார்க்கும் வசதி உண்டு. விரைவில் இதை எளிதாக்கும் புதிய அம்சம் வரவுள்ளது. Aerial எனும் புதிய…

ஆப்பிள் கையகப்படுத்திய சில்லு
ஆப்பிள் நிறுவனம் ஐயர்லாந்தை தளமாகக் கொண்ட கணினிச் சில்லு வடிவமைப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. கணினிச் சில்லுகள் வடிவமைப்பில் அனுபவம் பெற்ற இந்த ஐசி மாஸ்க் டிசைன் நிறுவனம், செப்டம்பர் 29 அன்று ஆப்பிளில்…

குறுஞ்செய்தி நிர்வாகி கூகுள்
இன்றைய காலத்தில் குறுஞ்செய்திகள் நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டன. வங்கி பரிவர்த்தனைகள், விளம்பர செய்திகள், தரவு எச்சரிக்கைகள் போன்ற தகவல்கள் தொடர்ந்து வரும் நிலையில், அவற்றைச் சீராக நிர்வகிப்பது சவாலாக மாறியுள்ளது.…

தமிழ் தட்டெழுத்தில் ஆங்கிலச் சொற்கள்
தமிழில் தட்டெழுதிவரும் ஒரு கட்டுரையின் இடையே ஒரு சில ஆங்கிலச் சொற்களைத் தட்டெழுதும் தேவையிருந்தால், முரசு அஞ்சல் செயலி, ஒரே விசையில் அந்த வசதியைக் கொடுக்கிறது
