ஐபோன் உள்ளே அடோபி

படங்களை மேம்படுத்தும் செயலிகள் துறையில் முன்னணியில் உள்ள அடோபி (Adobe) நிறுவனம் தனது பிரீமியர் (Premiere) செயலியை ஐபோனுக்கு இலவசமாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30, 2025 அன்று ஆப்ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யக் கூடியதாக உள்ள இச்செயலி, தரமான தொழில்முறை காணொளி மேம்படுத்தும் வசதிகளை மொபைலில் கொண்டுவருகிறது.

Adobe

இச்செயலி முற்றிலும் இலவசம், விளம்பரங்கள் இல்லை. ஐபோன் பயனர்களை இலக்காகக் கொண்டாலும், ஐபேடுக்கும் கிடைக்கிறது. சில அம்சங்களான கூடுதல் சேமிப்பகம், செயற்கை நுண்ணறிவு அம்சம் ஆகியவற்றுக்கு மட்டும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆண்டிராய்டு பதிப்பும் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

இதில் காணொளி, ஒலி உரை அடுக்குகளை வரம்பின்றி சேர்க்கலாம். 4K HDR தரத்தில் காணொளிகளை மேம்பாடு செய்யும் வசதி உள்ளது. துல்லியம் சாத்தியம். படுக்கைவசத் திசையில் வேலை செய்யும் இடைமுகம், திறன்பேசிக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தானியங்கி வசன அம்சம் சிறப்பானது. இது குறிப்பிட்ட பாணியிலான துணைத்தலைப்புகளை உருவாக்குகிறது. நிறம், நிழல்கள் போன்ற காரணிகளை வெவ்வேறு சட்டகத்துக்குத் தகுந்தவாறு மாற்றியமைக்கலாம். சினிமாடிக் நிற திருத்தம் ஒரு தட்டில் சாத்தியம். நகரும் படத்தின் வசனங்களை எளிதாகச் சேர்க்கலாம்.

ஃபயர்ஃபிளை (Firefly) செயற்கை நுண்ணறிவு மூலம் ஒலி விளைவுகளை உருவாக்கலாம். முதல் தரமான ஒலி வசதி கிடைக்கிறது. தெளிவான குரல் பதிவுகள், சரியான நேர ஒலி விளைவுகள் இதில் அடங்கும். இலட்சக்கணக்கான இலவச படங்கள், காணொளிகள், ஒட்டுப்படங்கள், எழுத்துருக்கள் கிடைக்கின்றன.

மேசைக்கணினி ஒருங்கிணைப்பு முக்கியமான வசதி. திறன்பேசியில் தொடங்கிய வேலையை பிரீமியர் ப்ரோ டெஸ்க்டாப்பில் தொடர்ந்து செய்யலாம். இது உள்ளடக்கம் உருவாக்குபவர்களுக்கு பெரிய வசதி. ஒரே தட்டில் எக்ஸ்போர்ட் செய்யும் அம்சம் மூலம் எந்த சமூக ஊடகத்திலும் நேரடியாகப் பகிரலாம்.

கேப்கட் (CapCut) போன்ற செயலிகளுக்கு இது வலுவான மாற்றாக உருவெடுக்கிறது. எளிமையான இடைமுகம், சக்திவாய்ந்த அம்சங்கள், தொழில்முறை தரம் ஆகியவற்றுடன் காணொளி எடிட்டிங்கை திறன்பேசியில் முழுமையாக்குகிறது. உள்ளடக்க உருவாக்குபவர்கள், சமூக ஊடக பயனர்கள் இருவருக்கும் இது ஏற்றது.

அடோபி இந்த செயலியை உலகளவில் இலவசமாக வெளியிட்டுள்ளது.

  • செல்லினம் குழு
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now