ஹுவாவே, ஆசுஸ் போன்ற கருவிகளில் செல்லினம் அமைப்பில் தமிழ் மொழிக்கான தேர்வு தோன்றுவதில்லை என சிலர் மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வழியாகவும் முகநூல் வழியாகவும் தெரிவித்துள்ளனர். இது இந்தக் கருவிகளை இயக்கும் இயங்குதளங்களில் உள்ள வழுவாக இருக்கலாம் என்பதை எங்கள் ஆய்வுகள் காட்டுகின்றன. சாம்சங், எச் டி சி, நெக்சாசு போன்ற கருவிகளில் செல்லினத்தின் இயக்கத்தில் எந்தவிதச் சிக்கலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கலுள்ள கருவிகளிலும் செல்லினம் இயங்குவதற்கு செல்லினத்தின் 4.0.1ஆம் பதிகையில் மாற்றுவழிகளைக் கண்டுள்ளோம். இந்தக் கருவிகளில் தமிழ் விசைமுகங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளோம்.
1. செல்லினத்தை பதிகை 4.0.1க்கு மேம்படுத்தவும்.
2. மொழித்தேர்வு பக்கத்தில் “Use system language” என்ற தேர்வை அப்படியே வைத்துவிடவும். முன்பு போலவே இந்தப் பக்கத்தில் தமிழ் விசைமுகங்களுக்கான தேர்வு தோன்றாது.
3. செய்திகளை எழுதும் போது, செல்லினத்தின் சின்னத்தைத் தட்டி அடுத்தடுத்த விசைமுகங்களுக்குச் செல்லலாம். ‘அஞ்சல்’ விசைமுகமும் ‘தமிழ்99’ விசைமுகமும் ஒன்றன்பின் ஒன்றாக வரும். உங்களுக்குப் பழக்கமுள்ள விசைமுகத்தைக் கொண்டு தமிழில் எழுதலாம்.
We received numerous feedback from users via emails, text and Facebook messages about the absence of Tamil in Sellinam settings when run on Huawei, Asus and a few other models. Our research showed that this may be a bug in the operating systems running on these devices and not in Sellinam. Sellinam works flawlessly on devices like Samsung, HTC and Nexus series. We have added a workaround in version 4.0.1 of Sellinam specifically for problematic ones like Huawei. The steps below will show you how to enable Tamil keypads on these devices.
1. Update Sellinam to version 4.0.1
2. Leave the language selection in the Keyboards section as “Use system language”. You will not see any Tamil keyboards in the list.
3. While composing text with Sellinam, use the Sellinam icon to switch between keyboards. ‘Anjal’ and ‘Tamil99’ keyboards will come one after another. Use the Tamil keyboard you are most familiar with.