செல்லினத்தைக் கொண்டு செய்திகளை எழுதும்போது நகைப்புக்குறிகளை (சிமைலிகளை) சேர்க்க முடியவில்லை என சில பயனர்கள் கூறியிருந்தார்கள்.
உங்கள் கருவியில் நகைப்புக் குறிகளுக்கான எழுத்துரு சேர்க்கப்பட்டிருந்தால் செல்லினத்தைக் கொண்டே அவற்றை உள்ளிடலாம். இதற்கென வேறு உள்ளீட்டு முறைகளுக்குச் செல்லத் தேவையில்லை.
அண்மைய ஆண்டிராய்டு பதிப்புகளில் இந்த எழுத்துரு இயல்பாகவே சேர்க்கப்பட்டிருக்கும். இல்லையேல் உங்கள் இயங்குதளத்தை மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.
நகைப்புக்குறிகளை உள்ளிடுவதற்கு இடுகை (எண்டர்) விசையை சற்றதிகம் அழுத்தினால் சிரிப்புக்கான சின்னம் தோன்றும். அதைத் தொட்டால், அனைத்து குறிகளையும் கொண்ட விசைமுகம் தோன்றும். மீண்டும் எழுத்து விசைமுகத்திற்குச் செல்ல ABC எனும் விசையைத் தட்டினால் போதும்.
இந்தப் படிகளைக் கீழ்க்காணும் படங்களில் காணலாம்: