கூகுள் பிக்சல் முகப்புத்திரை

கூகுள் பிக்சல் 9ஏ திறன்பேசியில் பயன்பட உள்ள முகப்புப்படங்கள் வெளியாகியுள்ளன.

கூகுள் பிக்சல் திறன்பேசிகளின் வரிசையை மேலும் அலங்கரிக்க, மார்ச் 19 முதல் சந்தைக்கு வருகிறது பிக்சல் 9ஏ ரக திறன்பேசி. இது வெளியாவதற்கு முன்பே அதைப் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து, பயனர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் திறன்பேசியின் முகப்புப்படங்களைப் (wallpaper )பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Google Pixel 9A

ஏற்கனவே ஒரு தொகுப்பில் இடம்பெற உள்ள முகப்புப்படங்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் எட்டு முகப்புப்படங்களைக் கொண்ட மற்றொரு தொகுப்பும் இப்போது கசிந்துள்ளது. இந்த எட்டு முகப்புப்படங்களும், பூக்களையும் அடர் வண்ணங்களையும் கொண்டுள்ளன. வண்ண விரும்பிகளுக்கு விருந்து என்றே இந்த தொகுப்பைக் கூறலாம். ஏனெனில் முதல் தொகுப்பை விடவும் விதவிதமான படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பிற திறன்பேசிகளில், இந்த முகப்புப் படங்களைப் பயன்படுத்த வேண்டுமென நீங்கள் விரும்பினால் அதற்கும் வழி இருக்கிறது. ஆன்டிராய்டு அத்தாரிட்டி போன்ற தளங்களில் இருக்கும் படங்களைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். இதில் முழு தரத்தில் அம்முகப்புப்படங்கள் வழங்கப்பட்டுள்ளன. படங்கள் உங்கள் திறன்பேசியில் சேமிக்கப்பட்டவுடன், அவற்றை முகப்புப்படங்களாக அமைக்கக் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் திறன்பேசிகளிலும் அமைப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளோம்.

முதலில் ஆன்டிராய்டில் அமைப்பதற்கு, அமைப்புகள் செயலியைத் சொடுக்குங்கள். அங்கே Wallpaper & style என்ற பக்கத்தைத் தேர்ந்தெடுங்கள். அதில் முகப்புப்படம் என்பதைத் தொடுங்கள். எனது புகைப்படங்களுக்குச் சென்று உங்களுக்குப் பிடித்த முகப்புப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து முகப்புப்படமாக அமை என்பதை அழுத்தவும். இந்த படங்களைப் பூட்டுத்திரை அல்லது முகப்புத்திரையில் அமைக்க விரும்புகிறீர்களா என்பதை தேர்வுசெய்யவும். இனிமேல் அமை என்பதைச் சொடுக்கினால் உங்களுக்குப் பிடித்த பிக்சலின் முகப்புப்படங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஐபோனில் பயன்படுத்த, அமைப்புகள் பயன்பாட்டில் முகப்புப்படம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிய முகப்புப்படத்தைச் சேர் என்பதைத் தொட்டு நீங்கள் அமைக்க விரும்பும் முகப்புப்படத்தை தேர்ந்தெடுங்கள். பின்னர் அமை என்பதைத் தொட்டு எளிதாக அமைத்துக்கொள்ளுங்கள்.

மார்ச் மாதத்தில் பிக்சல் 9ஏ அறிமுகப்படுத்தப்படும் போது புதிய முகப்புப்படங்கள் ஆரம்பத்தில் தோன்றாது. அதற்குப் பதிலாக அடுத்து வரும் பதிப்பில் பதிவிறக்கி பயன்படுத்தலாம்.

  • மு.‌ இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now