உருமாறும் மின்கலம்

ஆண்டிராய்டு 16 இயங்குதளத்தில் மின்கல நிலைக்காட்டி வடிவத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Android 16

கூகுள் அதன் கருவிகளில் பயனர் இடைமுக வடிவங்களை மேம்படுத்தி, பயனர்களின் தேவைகளை எளிதாக நிறைவு செய்யும் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது. இந்த முன்னெடுப்புகளில் ஒன்றுதான் மெட்டீரியல் 3 எக்ஸ்பிரஸிவ் (Material 3 Expressive). பயனர் இடைமுக வடிவங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் இந்த முறை அதிகப்படியான ஆய்வுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ளது எனக் கூறுகிறது கூகுள். இது வடிவங்களின் நிறம், வடிவம், அளவு, இயக்கம் போன்றவற்றில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. ஆண்டிராய்டு 16 இயங்குதளத்தில் முழுவதுமாக பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

தற்போது இதன் மூலம் மாற்றம் செய்யப்பட்ட புதிய மின்கல நிலைக்காட்டிதற்போது இதன் மூலம் மாற்றம் செய்யப்பட்ட புதிய மின்கல நிலைக்காட்டி வடிவம் வெளியாகியுள்ளது. இப்போதுள்ள ஆண்டிராய்டு திறன்பேசிகளில், மின்கலத்திற்கான வடிவம் பெரும்பாலும் செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. அதன் முனைகள் கூர்மையாகவும் இருக்கின்றன. ஒருவேளை நீங்கள் மின்கலனின் இருப்பு விழுக்காட்டினைப் பார்க்க விரும்பினால் அது மின்கல வடிவத்திற்கு அடுத்ததாகக் காண்பிக்கப்படும். இனிமேல் வரவுள்ள புதிய வடிவமானது முனைகள் மழுங்கிய நிலையில் கிடைமட்டமாகக் காணப்படும். மின்கல இருப்பு விழுக்காடும் மின்கலத்திற்கு உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது.

அதன் நிறங்களும் நான்கு விதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் நிறம் மின் சேமிப்பு நிலையைக் குறிப்பதற்காகவும், சிவப்பு நிறம் மின்கல விழுக்காடு குறைவாக இருப்பதையும் காட்டுகிறது. மின்னேற்றம் செய்யும்போது பச்சை நிறத்தில் அருகில் மின்னல் வடிவமும் கொண்டுவரப்பட்டுள்ளது. சாதாரண நிலையில் மின்கலத்தின் உள்ளே வெள்ளை நிறத்தால் நிறைந்து இருக்கும். இந்த புதிய வடிவமானது முந்தைய வடிவத்திலிருந்து பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நிறங்கள் மின்கலத்தின் நிலையை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும்.

இந்த புதிய வடிவமானது ஐஓஎஸ் இயங்குதளத்தில் உள்ளதைப் போலவே உள்ளது. இரண்டிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில் சாதாரண நிலையில் மின்கலத்தின் நிறத்தைக் குறிக்கும் நிறம்தான். ஐஓஎஸ் இயங்குதளத்தில் வெள்ளை நிறத்திற்கு மாற்றாகக் கருப்பு நிறம் உள்ளது.

இந்த மின்கல வடிவத்தின் மாற்றம் சிறிய ஒன்றுதான். இதைப்போன்ற மாற்றங்கள் ஆண்டிராய்டு 16 இயங்குதளத்தின் முழுமையான வெளியீட்டின்போது வெளிவரும்.

  • மு. இசக்கிமுத்து.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now