மலேசியாவில் நடந்த முரசு அஞ்சல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் தங்கள் சமூகவலைத்தளங்களில் படங்களைப் பகிர்கையில் முரசு அஞ்சல் பேஸ்புக் பக்கத்தை இணைக்கும்படி விழாவில் தெரிவிக்கப்பட்டது. பயனர்கள் பலர் அதைச் செய்தனர். பல்வேறு ஊடகங்களும் முரசு அஞ்சல் வெளியீடு பற்றிச் செய்தி வெளியிட்டிருந்தன. சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

தமிழ் மலர் நாளேடு
முத்து நெடுமாறனின் நாற்பது ஆண்டுக்கால பயணத்தில் பல வடிவங்களில் பரிணமித்து வெற்றிநடை போட்டு வருகிறது முரசு அஞ்சல். அதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் முரசு அஞ்சலில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களே முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டு உரு நூல் வெளியீடு பற்றி விரிவாகச் செய்தி வெளியிட்டது.
மக்கள் ஓசை செய்தித்தாள்
சொற்களுக்கான விளக்கம், சொற்கள் சரியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனவா என்ற பரிந்துரை, அகராதி மூலம் சொற்களுக்கான பொருள் விளக்கம் தேடுதல், ஒரு சொல்லைத் தட்டச்சு செய்யும்போது அந்த சொல்லைச் சரியான முறையில் எழுத்துப் பிழையின்றி இருக்கிறதா என்ற பரிந்துரை, தட்டச்சு செய்யும் சொல்லுக்கு அடுத்த பொருத்தமான சொல்லைத் தானாகவே மென்பொருள் பரிந்துரை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி முத்து நெடுமாறன் தெளிவுபடுத்தினார் என நிகழ்ச்சியின் கருவை பற்றி விவரித்துள்ளது.
மலேசியா செய்தி இணையதளம்
முரசு அஞ்சலின் மேம்படுத்தப்பட்ட மென்பொருளை நிகழ்ச்சிக்கு வருகை தந்த 300-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் முரசு அஞ்சலின் பயனர்களை வைத்தே வெளியீடு செய்துள்ளது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளது வணக்கம் மலேசியா செய்தி இணையதளம்.
இந்த இணைப்பை சொடுக்கி முழு செய்தியையும் படிக்கலாம்
செல்லியல்
முரசு அஞ்சல் மென்பொருள் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகை தரப் பதிவு செய்திருந்த அனைவருக்கும் இந்த புதிய மென்பொருளை வாங்குவதற்கான சிறப்புக் கழிவுகள் வழங்கப்படும். பயனர்களுக்கு இலவச பதிப்பு ஒன்றும் வழங்கப்படும், தனிநபர் பதிப்பு வணிகப் பதிப்பு என இரண்டு பிரிவுகளில் அதற்குரிய கட்டணங்களுடன் இந்த மென்பொருள் விற்பனைக்கு வருகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
முழு செய்தியை படிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்
ஆந்தை ரிப்போர்ட்டர்
முரசு அஞ்சல் புதிய பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி மூன்று நாடுகளில் மூன்று வெவ்வேறு நாள்களில் நடைபெறுகிறது. முதல் வெளியீடு ஜூலை 27 அன்று மலேசியாவில் நடைபெற்றது. அடுத்த நிகழ்ச்சி சிங்கப்பூரில் ஜூலை 5 அன்று நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நிகழ்ச்சியானது சென்னையில் ஜூலை 12-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ் மென்பொருள் ஒன்று இத்தகைய மாபெரும் வெளியீடு காண்பது பெருமைக்குரிய செய்தி எனக் குறிப்பிட்டுள்ளது ஆந்தை ரிப்போர்ட்டர் செய்தி ஊடகம்.
இந்த இணைப்பை சொடுக்கி ஆந்தை ரிப்போர்ட்டர் செய்தியை படிக்கலாம்
பேரா. ராஜேஷ் ராமசாமியின் பேஸ்புக் பதிவு
உரு நூலாசிரியரின் உரை மிக நிதர்சனமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. இந்நூலின் ஆசிரியர், எழுத்தாளர் கோகிலா, மெட்ராஸ் பேப்பரின் அரசியல் கட்டுரையாளராக இருப்பதினால் என்னவோ, அவரின் ஒவ்வொரு கூற்றுக்கும் போதிய காரணங்களையும் ஏரணங்களையும் எடுத்துக் கூறி அருமையாகப் பேசியிருந்தார். அவர் பேச்சுனூடே தெரிந்த அறம், முத்து நெடுமாறன் ஐயாவில் நீண்ட நெடிய பயணத்தின் நீட்சியையும் மாட்சிமையைக் காட்டுவதாகத் தன் நிகழ்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் இணைப் பேராசிரியர் ராஜேஷ் ராமசாமி.
பேராசிரியர் ராஜேஷ் ராமசாமியின் முகநூல் பதிவு
நெடுஞ்செழியன் வேங்கு
முரசு அஞ்சல், உரு நூல் வெளியீட்டு நிகழ்வில் சிலாங்கூர் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ வி.எல்.காந்தன், ஆசான் மன்னர் மன்னன், டாக்டர் எலந்தமிழ், டாக்டர் செல்வம், டாக்டர் செல்வஜோதி, டாக்டர் முல்லை ராமையா மற்றும் டாக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆளுமைகள் கலந்து கொண்டது கொண்டாட்டத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றியதாகப் பதிவிட்டுள்ளார் MY Dental International Clinics Sdn. Bhd இன் தலைமை நிர்வாக அதிகாரி நெடுஞ்செழியன் வேங்கு.
முழுமையான முகநூல் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்
தமிழ்முல்லை தண்ணீர்மலை
முரசு அஞ்சல், கல்வி மற்றும் தொழில்துறையில் தகவல்களைத் தெளிவாக, முறையாகப் பகிர வழிவகுக்கும், தமிழ்ச்சமூகத்திற்கு ஒரு முக்கியமான தொழில்நுட்பச் சாதனமாக விளங்குகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் தமிழ்முல்லை தண்ணீர்மலை.
முழுமையான முகநூல் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்
இளமாறன் ராமமூர்த்தி
முரசு அஞ்சல் மென்பொருளின் தற்போதைய பயனர்கள் புதிய பதிப்பிற்குத் தகுதியுடையவர்கள். இது மேம்படுத்தப்பட்ட எழுத்துருக்கள், முன் கணிப்பு உரை செயல்பாடுகள் மற்றும் செறிவூட்டப்பட்ட அகராதி போன்ற மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது எனப் பதிவிட்டுள்ளார் ஐவிஏஆர் கட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி இளமாறன் ராமமூர்த்தி.
முழுமையான முகநூல் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்
ராமேஸ்வரி ராஜா
எழுத்துருவியல் துறை நிபுணரான நண்பர் திரு. முத்து நெடுமாறன் அவர்களின் முரசு அஞ்சல் மென்பொருளின் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியீடும் அவரது பயணத்தை விவரிக்கும் ‘உரு’ என்கிற நூலின் வெளியீட்டு விழாவும் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது. கலந்துகொண்டதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டேன் என்கிறார் ராமேஸ்வரி ராஜா.
முழு முகநூல் பதிவுக்கு இங்கே சொடுக்கவும்
புசாட் துய்சியென் பெர்லியன் பக்தி
மலேசியக் கணிஞரும், எழுத்துருவியல் துறை நிபுணருமான திரு.முத்து நெடுமாறன் அவர்களின் கைவண்ணத்திலும் சிந்தனையிலும், புதிய தொழில்நுட்ப சேர்க்கைகளோடு, அவரின் நீண்ட கால உழைப்பின் பயனாக. உருவாகியிருக்கும் முரசு அஞ்சல் தமிழ் மென்பொருள் புதிய பதிப்பு பெட்டாலிங் ஜெயாவில் கோலாகல வெளியீடு கண்டது எனப் பதிவிட்டுள்ளார் புசாட் துய்சியென் பெர்லியன் பக்தி.
முழு முகநூல் பதிவுக்கு இங்கே சொடுக்கவும்
தமிழாசியா புத்தக மையம்
முத்து நெடுமாறன் அவர்களின் நாற்பதாண்டுக்கால வாழ்வின் சாரத்தை மையமாக வைத்து நண்பர் கோகிலா எழுதியுள்ள ‘உரு’ நூலை மலேசிய நண்பர்கள் தமிழாசியாவில் வாங்கலாம். நமது முன்னோடிகளின் வாழ்வும் சிக்கலான காலங்களில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைகளுமே நமக்கான வழிகாட்டிகள். கீழே உள்ள இணைப்பின் வழி ‘உரு’ நூலை மலேசியர்கள் வாங்கலாம். அல்லது 0125158314 என்ற புலன எண்ணில் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது தமிழாசியா புத்தக மையம்.
இந்த இணைப்பை சொடுக்கி முழு பதிவை படிக்கலாம்
ஆஸ்ட்ரோ உலகம் தொலைக்காட்சி
“நான் இடைநிலைப் பள்ளி படிக்கும்போது நிறையத் தமிழ் நிகழ்ச்சிகள் செய்வோம். அப்போது தமிழில் நகலெடுப்பதற்கும் ஆங்கிலத்தில் நகலெடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. தமிழ் மிகவும் சிரமாக இருந்தது அப்போது உருவான கோபம் தான் இந்த துறை பக்கம் என்னைத் திருப்பியது. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றுதான் எழுத்துருவியலை தேர்ந்தெடுத்தேன்” என முத்து நெடுமாறனே நேரடியாகப் பேசும் காணொளியுடன் செய்தி வெளியிட்டுள்ளது ஆஸ்ட்ரோ உலகம் தொலைக்காட்சி.
இந்த இணைப்பை சொடுக்கி முழு காணொளியை காணலாம்
மீடியாகார்ப் செய்தி
சிங்கப்பூரின் கல்வித்துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது முரசு அஞ்சல் மென்பொருள். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு தற்கால நவீன சூழலுக்கு ஏற்ப முரசு அஞ்சலில் புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது மீடியா க்ராப் செய்தி ஊடகம்.
இந்த இணைப்பை சொடுக்கி முழு காணொளியை காணலாம்
ஜூலை 5ஆம் தேதி சிங்கப்பூரிலும் ஜூலை 12ஆம் தேதி சென்னையிலும் நடக்கவுள்ள முரசு அஞ்சல், உரு நூல் வெளியீடு நிகழ்ச்சிக்கு பதிவு செய்யும் இணைப்பைக் கீழே கொடுத்துள்ளோம்.
- சத்யா கோபாலன்
