கூகுள் வழங்கும் விருதுகள்

உலகம் முழுவதும் தொழில்நுட்பம் பெரும் வேகத்தில் முன்னேறி வருகிறது. இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது பல்கலைக்கழகங்களில் நடைபெறும் விஞ்ஞான, கணித, கணினி ஆராய்ச்சிகள். இத்தகைய கல்வி ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், புதிய தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கவும் கூகுள் நிறுவனம் “இயந்திர கற்றல்  இளங்கால பேராசிரியர் விருதுகள்” (Machine Learning and Systems Junior Faculty Awards) என்ற விருது திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த விருதுகள், இயந்திரக் கற்றல் (Machine Learning) மற்றும் கணினி அமைப்புகள் (Systems) துறையில் பணிபுரியும் இளநிலை பேராசிரியர்களுக்கானது. அவர்களது ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிக்கு நிதி உதவி வழங்குவது இதன் முக்கியமான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், அமெரிக்காவைச் சேர்ந்த 27 பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் $100,000 நிபந்தனையற்ற நிதி வழங்கப்படுகிறது.

இந்த விருது பெறுபவர்கள், உயர் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை கொண்ட கணினி அமைப்புகளை வடிவமைக்கும் துறையில் முன்னணியில் உள்ளவர்கள். இவர்களின் ஆராய்ச்சி, கணிமக் குறிமுறை முதல் மென்பொருள், வன்பொருள் வடிவமைப்பு வரை பரவியுள்ளது. இதன் மூலம், பெரிய அளவிலான இயந்திரக் கற்றல், மேகக் கணினி பயன்பாடுகள் சாத்தியமாகின்றன.

இவ்விருதுகள், கூகுளின் முன்னணி பொறியாளர்களால் தேர்வு செய்யப்படுகின்றன. இது கூகுள் நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கான தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாகும். இத்துடன், கூகுள் வழங்கும் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டங்கள், தொழில்நுட்ப மாநாடுகளுக்கான ஆதரவு, மாணவர்களுக்கான பயிற்சி பணிநிலை (Internship) வாய்ப்புகள் ஆகியவை கூட இணைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு பேராசிரியர்களின் அனுபவங்களை எடுத்துக்காட்டாகக் கூறும் போது, அவர்களது ஆரம்பக்கட்ட கல்வி வாழ்க்கையில் அரசு மற்றும் தொழில்துறை வழங்கிய நிதி உதவிகள், குறிப்பாக தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation) போன்ற அமைப்புகளின் பங்களிப்பு, அவர்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அவர்களால் வழிகாட்டப்பட்ட மாணவர்களின் வெற்றிக்கும் அடித்தளமாக இருந்தது.

கூகுள் நிறுவனமே லார்ரி பேஜ்,, செர்கே பிரின் ஆகிய இரு பட்டதாரி மாணவர்களின் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் நேரடி விளைவாக உருவானது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அது போலவே, இன்றைய இளநிலை பேராசிரியர்கள் நாளைய கண்டுபிடிப்பாளர்களாகவும், மாணவர்களுக்கு வழி காட்டும் கல்வியாளர்களாகவும், தொழில்நுட்ப மேதைகளாகவும் உருவாக உள்ளனர். இந்த விருது திட்டம், அவர்கள் முன்வைக்கும் புதிய முயற்சிகளுக்கு நம்பிக்கையூட்டும் தளமாக அமைகிறது.

  • நவீனா

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now