செல்லினம் செய்தித்தொகுப்பு – செப்டம்பர் 21, 2025

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

நவீன நாட்குறிப்பு செயலிகள்

நவீன நாட்குறிப்பு செயலிகள்

இன்று நாட்குறிப்பு எழுதும் அனுபவத்தை முற்றிலும் மாற்றிவிட்டன திறன்கருவிச் செயலிகள். ஆப்பிள் தனது ஜர்னல் செயலியை 2023-ஆம் ஆண்டு அறிவித்தபோது, நாட்க்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டோர் ஆவலுடன் எதிர்பார்த்தனர். தொடக்கத்தில், ஐபோன் பயனர்களுக்கு…
வண்டியோட்டும் ஜெமினி

வண்டியோட்டும் ஜெமினி

இன்று நாம் ஓட்டும் வாகனத்தில் கைப்பேசியை இணைப்பது, இருக்கைப்பட்டை அணிவது போலவே, ஓட்டுநர்களுக்கு இயல்பான ஒன்றாகி விட்டது. ஆனால், இவ்மைப்புகள் ஒருகாலத்தில் சிக்கலானதும், பயன்படுத்த கடினமான இடைமுகத்தை உடையதாகவும் இருந்தன. வாகன ஓட்டிகள்…
iOS 26-க்கான செல்லினம் புதுப்பிப்பு

iOS 26-க்கான செல்லினம் புதுப்பிப்பு

ஆண்டுதோறும் புதிய இயங்குதள புதுப்பிப்புகள் வரும்போது, அவற்றில் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பட நமது செயலிகளையும் உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டியிருக்கும். அண்மையில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐ.ஓ.எஸ் 26-க்குப் புதுப்பித்த சில பயனர்கள்,…
படத்தேர்வு எளிதாகிறது

படத்தேர்வு எளிதாகிறது

கூகுள் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தேடுதல் வசதியை ஆண்டிரய்டு போட்டோ பிக்கர் (Android Photo Picker) இடைமுகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது। ஆண்டிரய்டு போட்டோ பிக்கர் என்பது ஒரு பாதுகாப்பான, உள்ளமைக்கப்பட்ட இடைமுகம் ஆகும்
எம்மொழியில் பேசினாலும் நம் மொழியில் கேட்கலாம்

எம்மொழியில் பேசினாலும் நம் மொழியில் கேட்கலாம்

நமக்குத் தெரியாத மொழியில் ஒருவர் பேசினால் அதை நமக்குத் தெரிந்த மொழிக்கு மாற்றும் நேரலை மொழிபெயர்ப்பு வசதியை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் நுண்ணறிவு (Apple Intelligence) கொண்டு இந்த நுட்பம் இயக்கப்படுகிறது.
ஆழமாக அலசும் நோட்​புக் எல்எம்

ஆழமாக அலசும் நோட்​புக் எல்எம்

தனக்குத் தேவையான தகவல்களை கூகுளில் தேடிப் பெறுவதைவிட அரட்டைச் செயலிகளுடன் உரையாடிப் பெறுவதை மக்கள் விரும்புகிறார்கள். கூகுள் நிறுவனத்தின் நோட்புக் எல்எம், குறிப்பெடுக்கும் அவசியம் உள்ளவர்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now