சுமை தாங்கும் சுண்டுவிரல்

பலர் தங்கள் திறன்பேசிகளை சுண்டுவிரலில் சமநிலைப்படுத்தி பயன்படுத்துவதால் ஏற்படும் வலியை அனுபவிக்கின்றனர். இது ‘ஸ்மார்ட்போன் பிங்கி’ (smartphone pinky) என அழைக்கப்படுகிறது. சுண்டுவிரல் மூட்டுகளில் வலி ஏற்படுவதுடன், கை, மணிக்கட்டு வரை வலி பரவலாம். நவீன திறன்பேசிகளால் உருவாகும் இந்தச் சிக்கலை எதிர்கொள்ளும் சில வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

smartphone pinky

1. நீட்சிப் பயிற்சிகள்

தசைநீட்சிப் பயிற்சிகள் (stretch exercise) தசைகள், நரம்புகளை அமைதிப்படுத்த உதவும். மணிக்கட்டு நீட்சி பயிற்சிகள் குறிப்பாக பயனுள்ளவை. உள்ளங்கையில் சுண்டுவிரல் எலும்பு வழியே வலி ஏற்பட்டால், மெதுவாக ஒத்தடம் கொடுப்பது உதவும். கடுமையான வலி இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.

2. படுக்கையில் தலையணை ஆதரவு

படுக்கையில் திறன்பேசி பயன்படுத்தும்போது, தலையணை அல்லது போர்வை மீது கையை வைத்து அதன் ஆதரவுடன் பயன்படுத்தலாம். இது மணிக்கட்டு, விரல்களில் ஏற்படும் அழுத்தத்தை கணிசமாக குறைக்கும்.

3. இரு கைகளால் பயன்படுத்துதல்

திறன்பேசியை இரு கைகளால் பிடித்து பயன்படுத்துவது வலியை தவிர்க்க மிகச்சிறந்த வழி. ஒரே மூட்டில் எடையை சுமத்துவதற்கு பதில், இரு கைகளிலும் பரவலாக்குவதால் அழுத்தம் குறையும். வலது கை கட்டைவிரலால் செயல்படுத்தி, இடது கையால் ஆதரவு தரலாம்.

4. நீண்ட நேர பயன்பாட்டின்போது ஆதரவு

நீண்ட நேரம் போன் பயன்படுத்த வேண்டுமெனில், மணிக்கட்டு, முன்கை, முழங்கைக்கு தலையணை ஆதரவு கொடுக்கலாம். காலையில் காபி குடிக்கும்போது அல்லது மாலையில் டிவி பார்க்கும்போது இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5. இலகுவான திறன்பேசிகளைத் தேர்வு செய்தல்

கனமான திறன்பேசிகள் சுண்டுவிரல் வலியை அதிகரிக்கும். புதியத் திறன்பேசி வாங்கும்போது எடையை கணக்கில் எடுத்துக்கொள்வது நல்லது. வலி அதிகமாக இருந்தால், அடுத்த முறை மேம்படுத்தும்போது இலகுவான கருவியைத் தேர்வு செய்யலாம்.

6. பாப்சாக்கெட் அல்லது கிரிப் பயன்பாடு

பாப்சாக்கெட் (PopSocket), மோதிரங்கள், ஸ்ட்ராப்கள் போன்ற கருவிகள் போனை வேறுவிதமாக பிடிக்க உதவும். இதனால் சுண்டுவிரலில் எடை குறையும். இந்த தீர்வு அனைவருக்கும் பிடிக்காமல் போகலாம், ஆனால் பலருக்கு உதவியாக இருக்கும்.

7. தாங்கிகள், மாற்று திரைகள்

ஐந்து நிமிடங்களுக்கு மேல் காணொளி பார்க்க வேண்டுமெனில், மடிக்கணினி, தொலைக்காட்சி போன்ற மாற்று கருவிகளுக்கு மாறுவது நல்லது. இல்லையெனில் திறன்பேசித் தாங்கியை (phone stand) பயன்படுத்தலாம். இது நீண்ட நேரம் கையில் பிடித்துப் பார்க்கும்போது ஏற்படும் வலியை கணிசமாக குறைக்கும்.

இந்த வழிமுறைகளை முயன்று பார்த்து, உங்களுக்கு எது சிறப்பாக வேலை செய்கிறது எனக் கண்டறியுங்கள்.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now