தமிழ் முரசு நாளிதழ் அண்மையில் செல்லினம், முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறனின் நேர்காணலை வெளியிட்டுள்ளது.
முரசு அஞ்சல் செயலி மூன்று நாடுகளில் புதுப் பதிப்பை வெளியிட்டது நாம் அறிந்ததே. முத்து நெடுமாறனின் நாற்பதாண்டு கால கணித்தமிழ், எழுத்துருவியல் பயணத்தைச் சொல்லும் உரு நூல் வெளியீடும் அப்போது நடந்தது. இது பற்றி மேலும் விரிவாகப் பேசும் வகையில் தமிழ் முரசு நாளிதழ் நேர்காணல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொண்ணூறு ஆண்டுகளைக் கொண்டாடும் தமிழ் முரசு நாளிதழ் தங்களுக்கென்று ஒரு யூட்யூப் பக்கம் வைத்துள்ளது. இதில் ஆய கலை அரிய கலைஞர் என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தம் வாழ்வில் அரும்பெரும் செயல்களைச் செய்தவர்களை நேர்காணல் செய்து இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்புகின்றனர். அந்த வகையில் முத்து நெடுமாறனின் நேர்காணல் வெளியாகிறது. எழுத்தாளர் கோகிலாவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட உள்ள இந்நிகழ்ச்சியின் முதல் பகுதி தற்போது பதிவேற்றப்பட்டுள்ளது.
அதற்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளோம்.
ஆய கலை, அரிய கலைஞர் முத்து நெடுமாறன்.
