மேசைக்கணினி மெசேன்சர் இனி இல்லை

மெட்டா (Meta) நிறுவனம் தனது குறுஞ்செய்திச் சேவையான மெசேன்சர் (Messenger) சேவையின் மேசைக்கணினிப் பயன்பாடுகளை டிசம்பர் 15 அன்று முழுமையாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேக் (Mac), விண்டோசு (Windows) இயங்குதளங்களுக்கான தனி பயன்பாடுகள் இனி கிடைக்காது.

இந்த மாற்றத்தை டெக்கிரஞ்ச் (TechCrunch) செய்தியகம் வெளியிட்டது. டிசம்பர் 15 முதல் பயனர்கள் மேசைக்கணினி பயன்பாடுகளில் மெசேன்சர் உள்ளே நுழைய முடியாது. அவர்கள் தானாகவே பேஸ்புக் (Facebook) இணையதளத்திற்கு திருப்பிவிடப்படுவார்கள். மேக் ஆப் ஸ்டோரில் இருந்து இப்பயன்பாடு ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டது.

Meta Messenger

மெட்டா அறிவிப்பு அனுப்பும். அதன் பிறகு பயனர்கள் 60 நாள்களுக்கு மட்டுமே இப்பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும். அந்த காலகட்டம் முடிந்தவுடன் அணுகல் முற்றிலும் தடுக்கப்படும். மெட்டா பயனர்களை பயன்பாட்டை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

உரையாடல் வரலாற்றைப் பாதுகாக்க பயனர்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும். பாதுகாப்பான சேமிப்பை இயக்கி, கடவு (PIN) எண் அமைக்க வேண்டும். இது செய்யாவிட்டால் சில உரையாடல்கள் தொலைந்துபோகலாம். அமைப்புகளில் “Privacy & safety” பகுதிக்குச் சென்று “End-to-end encrypted chats” தேர்வு செய்து “Message storage” ல் பார்க்கலாம்.

விண்டோசு பயனர்கள் பேஸ்புக் டெஸ்க்டாப் பயன்பாட்டை உபயோகிக்கலாம். மேக், விண்டோசு இரண்டு பயனர்களும் Facebook.com அல்லது Messenger.com இணையதளங்களில் மெசஞ்சரை அணுகலாம். உரையாடல் வரலாறு எல்லா கருவிகளிலும் கிடைக்கும்.

2020 ஆம் ஆண்டில் பெருந்தொற்றுக் காலகட்டத்தில் மெட்டா டெஸ்க்டாப் மெசேன்சரை அறிமுகப்படுத்தியது. வீடியோ அழைப்புகள் இரட்டிப்பாக அதிகரித்த நேரத்தில் இது பயனுள்ளதாக இருந்தது. செப்டம்பர் 2024 இல் மெட்டா Progressive Web App முறைக்கு மாற்றியது. அப்பயன்பாடு நம்பகத்தன்மை குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

திறன்பேசிப் பயன்பாடுகளான ஐஓஎஸ், ஆண்டிராய்டு பதிப்புகள் தொடர்ந்து வழக்கம்போல் செயல்படும். மேசைக்கணினி அனுபவத்தை விரும்பிய பயனர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கலாம்.

  • செல்லினம் குழு
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now