இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

அறிவாளி ஆப்பிள்
ஆப்பிள் தனது பயனுள்ள கருவிகளில் ஒன்றான ஷார்ட்கட்ஸ் உடன் ஆப்பிள் நுண்ணறிவை நேரடியாக இணைத்துள்ளது। இதைப் பயன்படுத்துவதன் வழியாகப் பல்வேறு செயலிகளின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்

ஆள் சேர்க்கும் மெட்டா
ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு (AI) வலைத்தேடல் திட்டத்தை வழிநடத்திய தலைமைப் பணியாளர் கீ யாங் மெட்டா நிறுவனத்துக்கு மாறுகிறார். இது ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவிலிருந்து வெளியேறும் முக்கியமான நபர்களின் வரிசையில் அண்மையில்…

மேசைக்கணினி மெசேன்சர் இனி இல்லை
மெட்டா (Meta) நிறுவனம் தனது குறுஞ்செய்திச் சேவையான மெசேன்சர் (Messenger) சேவையின் மேசைக்கணினிப் பயன்பாடுகளை டிசம்பர் 15 அன்று முழுமையாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேக் (Mac), விண்டோசு (Windows) இயங்குதளங்களுக்கான தனி பயன்பாடுகள்…

சந்திப்பை அழகாக்கும் கூகுள்
கூகுள் மீட் (Google Meet) செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அழகுபடுத்தும் பயன்பாட்டை இணைய, திறன்பேசிப் பதிப்புகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. திடீரென காணொளி அழைப்புக்கு தயாராக இல்லாத நேரங்களில் இது உதவியாக இருக்கும்.

பிழை கண்டுபிடித்தால் பரிசு
பிழையின்றி நல்ல தமிழில் எழுத வேண்டும் என்று எல்லாத் தமிழார்வலர்களுக்கும் ஓர் அவா இருக்கும். ஆனால் பிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் பலர் தயக்கம் காட்டுவார்கள். அந்தத் தயக்கத்தைப் போக்கி அனைவரும் இணைந்து தமிழை…

இனிய தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து செல்லினம் பயனர்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம்। நமது அன்புக்குரிய அனைவரோடும் மகிழ்ச்சியாக இந்த நன்னாளைக் கொண்டாடுவோம்। அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்। — செல்லினம்
