இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

ஆண்டிராய்டு கோப்பு ஐபோனில்
கூகுள் நிறுவனம் தனது குயிக் ஷேர் (Quick Share) செயலியில் புதிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இது ஆண்டிராய்டு, ஐபோன் கருவிகளுக்கிடையே கோப்புகளை எளிதாகப் பகிர உதவும். ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டிராப் (AirDrop) வசதியுடன்…

ஆப்பிள் வரைபடச் செயலில் இது புதிது
ஆப்பிள் நிறுவனம் iOS 18 புதுப்பிப்பில் மேப்ஸ் செயலியில் லைப்ரரி (Library) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களைச் சேமித்து எளிதாக அணுக உதவும் கருவியாகும்.

ஓப்பன்ஏஐ வன்பொருள் ஒப்பந்தம்
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓப்பன்ஏஐ நிறுவனம், உலகின் மிகப்பெரிய மின்னணுப்பொருள் உற்பத்தியாளரான தைவானின் பாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தரவு மைய வன்பொருள்களை வடிவமைத்து தயாரிக்க…

முரசு அஞ்சல் 12.0.4 பதிப்பு வெளியானது!
கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட முரசு அஞ்சல் செயலியின் 12ஆம் பதிப்பைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு புதிய வசதிகளைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகளையும் வழங்கி வருகின்றனர். அதற்கேற்ப அவ்வப்போது சிறுசிறு மேம்பாடுகளை…

படங்களை வேண்டியபடி திருத்தலாம்
கூகுள் தனது புகைப்பட செயலியில் தனிப்பயனாக்கப்பட்ட திருத்த வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது। இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் புடைப்படங்கள் செயலியில் “எனக்குத் திருத்த உதவு” என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டது

கூகுள் வரைபடத்தில் மின்சக்தி சேமிப்பு
கூகுள் தனது வரைபடங்கள் செயலியில் நெடுந்தூர பயணங்களின்போது உதவும் மின்சக்தி சேமிப்பு முறையை (power saving mode) அறிமுகப்படுத்தியிருக்கிறது। ஆண்டின் இறுதியில் தனது பிக்சல் திறன்பேசிகளுக்கு பல முக்கியமான புதுப்பிப்புகளை கூகுள் வழங்கி வருகிறது
